தெற்கு லண்டனில் 16 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம்: குற்றவாளி ஒருவர் கைது
தெற்கு லண்டனில் 16 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றவாளி கைது
தெற்கு லண்டனில் 16 வயது சிறுவன் லத்தானியல் புர்ரெல்(Lathaniel Burrell) சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் 32 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஸ்டாக்வெல் டியூப் நிலையத்திற்கு அருகிலுள்ள பாரடைஸ் சாலையில் துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்து அந்த 16 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:21 மணிக்கு துப்பாக்கிச் சூடு நடந்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த லண்டன் ஏர் ஆம்புலன்ஸ் மற்றும் லண்டன் ஆம்புலன்ஸ் சேவை உட்பட அவசரகால மருத்துவப் பணியாளர்கள் தேவையான முதலுதவி சிகிச்சைகள் செய்த போதிலும் லத்தானியல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
மெட்ரோபொலிட்டன் காவல்துறை இந்த கைது நடவடிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது.
இதையடுத்து வெள்ளிக்கிழமை அதிகாலையில் க்ரோய்டனில்(Croydon) 32 வயது நபர் கைது செய்யப்பட்டதாகவும், தற்போது அவர் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
லத்தானியலின் மரணத்திற்கு காரணமான அனைவரையும் அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் விசாரணை அதிகாரி சாரா லீ தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |