பிரித்தானிய நகரொன்றில் அசம்பாவித சம்பவம்: மூடப்பட்ட சாலைகள்
இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
தீயணைப்பு, மீட்பு சேவைக்கு அழைப்பு
சவுத்தாம்ப்டனில் ஞாயிறுக்கிழமை காலை 5.30 மணியளவில் மருத்துவமனை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.
இதனையடுத்து ஹாம்ப்ஷயர் மற்றும் ஐல் ஆஃப் வைட் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளில் இருந்தும் நோயாளிகள், மருத்துவமனையின் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனர்.

சந்திப்புகளும் ரத்து
கட்டிடத்தைச் சுற்றியுள்ள சாலைகள் அவசர சேவைகளால் மூடப்பட்டன. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
ஆபத்தான நிலையில் உள்ளவர்களைத் தவிர, மற்றபடி மருத்துவமனை தற்போது மக்களை உள்ளே அனுமதிப்பதில்லை என்று கூறப்படுகிறது.
பணிக்கு வரும் ஊழியர்களுக்காக மருத்துவமனை வளாகத்திலேயே வாகன நிறுத்துமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பார்வையாளர்கள் அந்தப் பகுதிக்கு வராமல் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அத்துடன் இன்று திட்டமிடப்பட்ட அனைத்து வெளிநோயாளர் சந்திப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |