லண்டனில் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்க 100 தீயணைப்பு வீரர்கள் போராட்டம்
லண்டனின் தென்கிழக்கு பகுதியில் உள்ள பாரஸ்ட் ஹில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கடைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் தீக்கிரையாகி உள்ளன.
இந்த பாரிய அளவிலான தீ விபத்தை 100 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
பெர்ரி வேலில் நடந்த தீ விபத்து சம்பவத்தில் Finches Emporium என்ற ஸ்கீயிங் மற்றும் ஸ்னோபோர்டிங் கடையானது பலத்த சேதமடைந்துள்ளது.
மேலும் தீ சூழ்ந்த கட்டிடத்தில் இருந்த 15 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர், அத்துடன் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தீயணைப்பு துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சமூக ஊடகங்களில் வெளியான வீடியோ காட்சிகளில் கட்டிடங்களை சுற்றி கரும்புகை வெளியேறுவதோடு தீப்பிழம்புகள் தெரிவதும் பார்க்க முடிகிறது.
தீ விபத்துக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் தங்களது ஜன்னல் மற்றும் வீட்டு கதவுகளை மூடி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |