புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமி... நியூசிலாந்து வீரர் சவுத்தியின் நெகிழ வைத்த செயல்
புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் 8 வயது குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக தனது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் ஜெர்சியை ஏலத்தில் விட்டுள்ளார் நியூசிலாந்து வீரர் டிம் சவுதி.
இந்த ஏல நடைமுறை வரும் ஜூலை 8 ம் திகதி மதியம் 1.45 மணி வரை லைவில் இருக்கும். இந்த ஜெர்சியில் அனைத்து நியூசிலாந்து அணி வீரர்களும் கையெழுத்து இட்டுள்ளனர்.
டிரேட்மி என்ற தளத்தில் இந்த ஏலம் நடந்து வருகிறது. இதுவரை இந்த ஜெர்சி 43,200 அமெரிக்க டொலர்களுக்கு விலை கேட்கப்பட்டுள்ளது.
எனது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் ஜெர்சியை ஏலத்தில் விட்டுள்ளேன். இதில் கிடைக்கும் அனைத்து நிதியையும் அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 8 வயது பெண் குழந்தை Hollie Beattie குடும்பத்திடம் அவரது சிகிச்சைக்காக கொடுக்க உள்ளேன்.
இது என்னால் முடிந்த ஒரு உதவி. இந்த ஜெர்சியால் திரட்டப்படும் தொகை அவளுக்கு சிகிச்சைக்கு தேவைப்படும் நிதியில் ஓரளவாவது உதவும் என்ற நம்பிக்கை உள்ளது என சவுதி தெரிவித்துள்ளார்.