சௌத்போர்ட் விமான விபத்து: புதிதாக பணியில் சேர்ந்த செவிலியர் உட்பட நால்வர் பலி!
சௌத்போர்ட் விமான விபத்தில் புதிதாகப் பணியில் சேர்ந்த செவிலியர் உட்பட நால்வர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சௌத்போர்ட் விமான விபத்து
லண்டன் சௌத்போர்ட் விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடந்த ஒரு சிறிய விமான விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
இவர்களில் புதிதாகப் பணியில் சேர்ந்த ஒரு "விமானச் செவிலியரும்" அடங்குவார்.
பிபிசி வெளியிட்ட தகவலின்படி, உயிரிழந்தவர்களில் ஒருவர் மரியா பெர்னாண்டா ரோஜாஸ் ஆர்ட்டிஸ், 31 வயதான சிலி வம்சாவளியைச் சேர்ந்த ஜெர்மன் குடிமகள் ஆவார். இவர் இதற்கு முன்பு பொதுத் துறையில் செவிலியராக பணியாற்றி வந்தார்.
இந்த துயரமான விபத்தில், ஒரு டச்சு விமானியும் துணை விமானியும் உயிரிழந்தவர்களில் அடங்குவர். உயிரிழந்த நான்கு பேரின் பெயர்களும் அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை.
விபத்துக்குள்ளான பீச் பி200 சூப்பர் கிங் ஏர் (Beech B200 Super King Air) விமானம் தரையில் மோதி வெடித்துச் சிதறியது. மருத்துவப் போக்குவரத்து சேவைகளில் நிபுணத்துவம் பெற்ற நெதர்லாந்தின் லெலிஸ்டாட் விமான நிலையத்தைச் சேர்ந்த சியூஷ் ஏவியேஷன் (Zeusch Aviation) நிறுவனம் இந்த விமானத்தை இயக்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த துயரச் சம்பவம் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக சியூஷ் ஏவியேஷன் உறுதிப்படுத்தியுள்ளது.
பிரதமர் இரங்கல்
விபத்தைத் தொடர்ந்து, பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில். பிரித்தானிய பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் எக்ஸ் தளத்தில் தனது இரங்கலைத் தெரிவித்தார்.
பிரதமர் தனது செய்தியில், "நேற்று சௌத்போர்ட் விமான நிலையத்தில் நடந்த விமான விபத்தில் நான்கு பேர் துயரமான முறையில் உயிரிழந்தது மிகவும் வருந்தத்தக்க செய்தி. அவர்களது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது எண்ணங்கள் செல்கின்றன" என்று குறிப்பிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |