பிரசவத்திற்குப் பிறகு இந்தியப் பெண்ணுக்கு ரூ.1.26 லட்சம் கொடுத்த கிழக்காசிய நாடு
கிழக்காசிய நாட்டில் இந்திய பெண் ஒருவர் தன்னுடைய கர்ப்ப காலம் மற்றும் அதற்குப் பிறகு தனக்குக் கிடைத்த அரசு ஆதரவை பற்றி கூறியுள்ளார்.
அரசின் ஆதரவு
தென் கொரியாவில் வசிக்கும் ஒரு இந்தியப் பெண்ணின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மேலும், தென் கொரியாவிற்கும் இந்தியாவின் மகப்பேறு ஆதரவு அமைப்புகளுக்கும் இடையிலான ஒப்பீட்டைப் விவாதித்துள்ளது.
mylovefromkorea17 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றிய நபரின் உண்மையான பெயர் நேஹா அரோரா.
தென் கொரிய நபரை மணந்து ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த நேஹா அரோரா, தென் கொரியாவில் கர்ப்ப காலத்தில் மற்றும் அதற்குப் பிறகு தனக்குக் கிடைத்த அரசாங்க ஆதரவைப் பற்றி கூறியுள்ளார்.
தனது கர்ப்பம் உறுதி செய்யப்பட்டவுடன் தென் கொரிய அரசு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருந்துகளுக்காக ரூ.63,100, பேருந்து, டாக்ஸி அல்லது அவர்களின் தனிப்பட்ட வாகனம் என பொதுப் போக்குவரத்துச் செலவுகளுக்காக ரூ.44,030 வழங்கியதாகவும் கூறியுள்ளார் நேஹா.
அதோடு பிரசவத்தின்போது, "Badhaai rashi on delivery" என்று அழைக்கப்படும் ரூ.1.26 லட்சத்தை மொத்தமாகப் பெற்றதாகவும் கூறினார்.
அதுமட்டுமல்லாமல் குழந்தை பிறந்த பிறகு, முதல் வருடத்திற்கு ஒவ்வொரு மாதமும் ரூ.63,100 வழங்கியதாகவும், இரண்டாம் வருடத்தில் ரூ.31,000 மற்றும் இரண்டு வயது முதல் எட்டு வயது வரை மாதத்திற்கு ரூ.12,000 வழங்கியதாகவும் கூறினார் நேஹா.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |