Southport சம்பவம்: Sunderland பகுதியில் பொலிஸாருடன் வெடித்த மோதல்!
Southport கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக Sunderland பகுதியில் நடந்த பேரணியில் பொலிஸார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Southport கத்திக்குத்து வன்முறை
பிரித்தானியாவில் Southport பகுதியில் நடந்த கொடூர கத்திக்குத்து சம்பவத்தில், 3 சிறுவர்கள் கொல்லப்பட்டதுடன், சிறுவர்கள் உட்பட டஜன் கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றிய நபரின் விவரங்கள் வெளியிடப்படாமல் இருந்த நிலையில், அதனை நேற்று நீதிமன்றம் விளக்கியது.
இதையடுத்து தாக்குதல்தாரியான 17 வயது நபரின் பெயர் Axel Muganwa Rudakubana எனவும், அவரது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.
Southport-ல் நடந்த இந்த சம்பவம், நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்திய அதே சமயத்தில், Southport, Liverpool, London போன்ற பல்வேறு பகுதிகளில் இந்த சம்பவத்தை கண்டித்து போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது.
Sunderland பகுதியில் வெடித்த கலவரம்
இந்நிலையில் Southport சம்பவத்தை கண்டித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையிலும் Sunderland பகுதியில் பேரணி போராட்டம் நடத்தப்பட்டது.
பொலிஸாரின் கவனத்துக்கு மத்தியில் இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில், Sunderland நகர மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபாட்டு இருந்த பொலிஸாரை நோக்கி கற்களை எரிந்ததுடன், கலக்காரர்கள் தீயணைப்பு வாகனத்திற்கு தீ வைத்தும் கொளுத்தினர்.
இதையடுத்து பொலிஸாருடன் மோதல் அதிகரிக்கவே அங்கிருந்த கார் கவிழ்க்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, வடகிழக்கு மேயர் Kim McGuinness, Sunderland-ல் நடந்த பேரணியை “இது எதிர்ப்பு போராட்டம் அல்ல, குற்றம் மற்றும் ஒழுங்கீனம்” என முத்திரை குத்தினார்.
அத்துடன் இது Southport-ல் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவொரு ஆறுதலும் தராது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |