பிரித்தானிய மக்களை மொத்தமாக உலுக்கிய சம்பவம்... இளைஞருக்கு 52 ஆண்டுகள் சிறை
பிரித்தானியாவில் Southport பகுதியில் மூன்று சிறுமிகளைக் கொன்ற இளைஞருக்கு குறைந்தது 52 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
துயரமான தருணங்களில் ஒன்று
குறித்த கோர சம்பவத்தை பிரித்தானியாவின் வரலாற்றில் மிகவும் துயரமான தருணங்களில் ஒன்று என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் குறிப்பிட்டிருந்தார்.
வெறும் 17 வயதான Axel Rudakubana தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், தீர்ப்பின் போது நீதிமன்றத்தில் வாய்விட்டு அலறியதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் Southport பகுதியில் நடந்த இந்தத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, நாடு முழுவதும் கலவரம் வெடித்தது.
தாக்குதலில் ஈடுபட்டவர் புபல்பெயர் அகதி என வெளியான பொய்யான தகவலை அடுத்தே கலவரம் வெடித்தது. ஆனால் Axel Rudakubana பிரித்தானியர் என்பது வெளிச்சத்துக்கு வந்ததன் பின்னர் சூழ்நிலை கட்டுக்குள் வந்தது.
குற்றவாளியான Rudakubana வன்முறை மற்றும் இனப்படுகொலையில் வெறி கொண்டவர் என்று அரசு தரப்பு சட்டத்தரணி டீனா ஹீர் லிவர்பூல் கிரவுன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
குறித்த நபரால் பாதிக்கப்பட்ட இருவர் மிகவும் பயங்கரமான காயங்களுக்கு ஆளானார்கள் என்றே அவர் குறிப்பிட்டுள்ளார். தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஜூலியன் கூஸ் தெரிவிக்கையில்,
Rudakubana குறைந்தபட்சம் 52 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், தாக்குதல் நடந்தபோது அவருக்கு 17 வயது என்பதால் முழு ஆயுள் தண்டனை விதிக்க முடியாது என்றும், ஆனால் அவர் ஒருபோதும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார்.
மகிழ்ச்சியைத் தருகிறது
மேலும், வியாழக்கிழமை விசாரணையின் போது இரண்டு முறை, Rudakubana உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூச்சலிட்ட பின்னர் அவையிலிருந்து அகற்றப்பட்டார். தனக்கு எதிரான தீர்ப்பை கேட்க நீதிமன்றத்திற்குத் திரும்ப அவர் மறுத்துவிட்டார்.
சம்பவத்தின் பதிவான காணொளி ஒன்றை நீதிமன்றத்தில் திரையிட்டுள்ளனர். அந்த நடன நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ள யோகா ஆசிரியர் Leanne Lucas தெரிவிக்கையில், நாங்கள் பெண்கள் மற்றும் சிறுமிகள் என்பதாலையே அவர் எங்களை குறிவைத்தார் என்றும், ஐந்து முறை கத்தியால் தாம் தாக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மொத்த 26 சிறார்கள் கலந்துகொண்ட அந்த விடுமுறை நிகழ்வில் Bebe King(6), Elsie Dot Stancombe(7), மற்றும் Alice Dasilva Aguiar(9) ஆகிய மூவர் கொல்லப்பட்டனர். இருவர் 85 முதல் 122 காயங்களுடன் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
ஒருவரின் தலையை துண்டிக்கும் முயற்சியும் நடந்துள்ளதாக அர்சு தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். கைதான பின்னர் பொலிசாரிடம் பதிலளித்த Rudakubana, அந்தக் குழந்தைகள் இறந்துவிட்டதில் எனக்கு மகிழ்ச்சி, அது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |