மீண்டும் சோவியத் யூனியன்... புடின் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் உறுதி
மீண்டும் சோவியத் யூனியன் அமைவது தவிர்க்கமுடியாதது என்று கூறியுள்ளார் புடின் ஆதரவாளரான ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்.
மீண்டும் சோவியத் யூனியன்...
Anatoly Wasserman, புடின் ஆதரவாளரும், ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழவை துணைத்தலைவரும் ஆவார்.
அவர், மீண்டும் சோவியத் யூனியன் அமைவது தவிர்க்கமுடியாதது என்று கூறியுள்ளார்.
அத்துடன், ஐரோப்பிய ஒன்றியம் வீழ்ச்சியடையும் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வரலாற்றைப் பார்த்தால், பல சாம்ராஜ்யங்கள் தோன்றியுள்ளன, வீழ்ச்சியும் அடைந்துள்ளன என்று கூறும் Wasserman, அதேபோல, ஐரோப்பிய ஒன்றியமும் வீழ்ச்சியடையும் என்கிறார்.
அதே நேரத்தில், ரஷ்யா, சில கண்டங்களை உள்ளடக்கிய சாம்ராஜ்யம் என்றும், ஏற்கனவே அது பலமுறை உடைந்து மீண்டும் உருப்பெற்றுள்ளது என்றும் கூறுகிறார்.
அது உடைந்து மீண்டும் உருவானால், உடைவதற்கு முன் இருந்ததை விட சிறப்புடையதாக உருவாகும் என்பதுதான் விதி என்று கூறும் Wasserman, 2025இல் சோவியத் யூனியன் மீண்டும் அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |