கறி சுவையை மிஞ்சும் வகையில் மீல்மேக்கர் 65: ரெசிபி இதோ
சைவ பிரியர்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு தான் இந்த மீல்மேக்கர்.
மீல்மேக்கர் வைத்த பலவிதமான உணவுகள் செய்யலாம், அதில் மிகவும் சுவையாக இருக்கக்கூடிய ஒரு உணவு தான் இந்த மீல்மேக்கர் 65.
இந்த மீல்மேக்கர் 56 சுலபமாகவும், சுவையாகவும் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- மீல்மேக்கர்- 1 கப்
 - உப்பு- தேவையான அளவு
 - மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்
 - சீரக தூள்- ½ ஸ்பூன்
 - கரம் மசாலா- 1 ஸ்பூன்
 - காஸ்மீரி மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
 - இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
 - அரிசி மா- 2 ஸ்பூன்
 - கடலை மா- 2 ஸ்பூன்
 - எலுமிச்சை- ½ ஸ்பூன்
 - எண்ணெய்- தேவையான அளவு
 - கறிவேப்பிலை- 1 கொத்து
 - பச்சை மிளகாய்- 3
 
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் சுடுதண்ணீர் சேர்த்து அதில் மீல்மேக்கர் மற்றும் உப்பு சேர்த்து 10 நிமிடம் மூடி போட்டு ஊறவைக்கவும்.
பின் இதனை குளிர்ந்த நீரில் சேர்த்து நன்கு பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் பிழிந்த மீல்மேக்கர், மஞ்சள் தூள், உப்பு, சீரக தூள், கரம் மசாலா, காஸ்மீரி மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், கடலை மா, அரிசி மா, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.
இதனைத்தொடர்ந்து வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கலந்து வைத்த மீல்மேக்கரை சேர்த்து பொறித்து எடுக்கவும்.
இறுதியாக எண்ணெயில் கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து பொறித்து அதன் மேல் சேர்த்து பரிமாறினாள் சுவையான மீல்மேக்கர் 65 தயார்.
|  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     |