பூமிக்கு திரும்பிய Soyuz MS -28 விண்கலம்: 241 நாட்கள் வெற்றிகரமாக முடிந்த விண்வெளி பயணம்
241 நாட்கள் விண்வெளி பயணத்தை முடித்துவிட்டு சோயுஸ் எம்.எஸ் 28 விண்கலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளது.
பூமிக்கு திரும்பிய Soyuz MS -28
ரஷ்யாவின் சோயுஸ் எம்.எஸ் 28(Soyuz MS -28) ரக விண்கலம் கஜகஸ்தானில் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது.
இந்த விண்கலத்தில் பயணம் செய்து 3 விண்வெளி வீரர்களும் பத்திரமாக பூமிக்கு திரும்பியுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை நாசா அறிவித்துள்ளது.

கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் 27ம் திகதி நாசா விண்வெளி வீரர் கிரிஸ் வில்லியம்ஸ் மற்றும் ரஷ்யாவின் ரோஸ்காஸ்மாஸ் விண்வெளி வீரர் செர்கெய் குட் ஸ்வெர்ச்ச்கோவ், செர்கெய் மிகாயேவ் ஆகியோர் சோயுஸ் எம்.எஸ் 28 விண்கலத்தில் தங்களது விண்வெளி பயணத்தை தொடங்கினர்.
கிட்டத்தட்ட 241 நாட்களுக்கு பிறகு இவர்களின் விண்வெளிப் பயணம் வெற்றிகரமாக தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.
Soyuz MS-28 lands in Kazakhstan, ending its 8 month long mission https://t.co/LvQfl9JZzq pic.twitter.com/dA38TSgCuo
— afec7032 🇷🇺 (@afec7032) July 26, 2026
படைத்துள்ள சாதனை
விண்வெளி வீரர் குழுவினர் தங்களது 241 நாள் விண்வெளி பயணத்தில் 3,856 முறை பூமியின் சுற்றுவட்டப் பாதையை சுற்றி வந்துள்ளனர்.
குழுவினர் கிட்டத்தட்ட 102 மில்லியன் மைல்களுக்கு மேல் கடந்து பயணம் செய்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |