வானில் இருந்து விழுந்த 500 கிலோ விண்வெளி குப்பை: கென்ய கிராமத்தில் பரபரப்பு
கென்யா கிராமம் ஒன்றில் சுமார் 500 கிலோ எடையுள்ள விண்வெளி குப்பை விழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விண்வெளி குப்பை
கென்யாவின் மகுவேனி(Makueni) மாவட்டத்தில் உள்ள முக்குகு(Mukuku) கிராமத்தில் சுமார் 2.5 மீட்டர் விட்டம் மற்றும் 500 கிலோ எடையுள்ள விண்வெளி குப்பை ஒன்று விழுந்துள்ளது.
டிசம்பர் 30ம் திகதி கிராமத்தில் விழுந்த இந்த விண்வெளி குப்பை, ராக்கெட்டின் பிரிப்பு வளையம் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Following the discovery of a metallic fragment of a space object in Mukuku Village, Makueni County, the Kenya Space Agency has issued the following statement. Read more for details on the incident, preliminary findings, and next steps. pic.twitter.com/n8gsvoKku4
— Kenya Space Agency (@SpaceAgencyKE) January 1, 2025
இந்த நிகழ்வை உறுதிப்படுத்தும் விதமாக கென்ய விண்வெளி அமைப்பு(Kenya Space Agency) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ராக்கெட்டின் நிலைகளை இணைக்க பிரிப்பு வளையங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றும், பொதுவாக மீள் நுழைவின் போது எரிந்து அழிவது அல்லது மக்கள் வசிக்காத பகுதிகளில் விழுவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் விளக்கியுள்ளது.
இந்த சம்பவத்தை தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வாக ஒப்புக்கொண்டாலும், சர்வதேச விண்வெளி சட்டத்தின் கட்டமைப்பிற்குள் விசாரணை மற்றும் நடவடிக்கை எடுப்பதற்கான தனது உறுதிப்பாட்டை அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
That "space debris" that fell in Makueni is worth $ M in research ( weight, heat resistance). But, our KE Space Agency and Police (really?)🤣 already declared it a "500kg metal". Every Lab wants such a small object that re-enters earth from space "ballistically" without burning pic.twitter.com/2l7v7mleWL
— Philosopher (@Philosopher254) January 1, 2025
பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை
இந்நிலையில் விண்வெளி குப்பை உடனடி பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்று கென்ய விண்வெளி அமைப்பு பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.
பொருளை பகுப்பாய்வு செய்வதற்கும், பொறுப்பான நிறுவனத்தை அடையாளம் காணவும், அடுத்தடுத்த நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கவும் KSA திட்டங்கள் வகுத்து வருவதாக தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |