விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிக் கொண்டிருக்கும் சுற்றுலா பயணிகள்!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட விண்வெளி சுற்றுலா பயணிகள் பூமிக்கு திரும்புகின்றனர்.
அமெரிக்காவின் ஆக்ஸியாம் ஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலத்தின் உதவியுடன் 4 பேரை விண்வெளிக்கு அனுப்பி வைத்தது.
கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற அவர்கள், தற்போது இரண்டு வார கால விண்வெளி பயணத்தை முடித்துள்ளனர்.
Undocking completed. The #Ax1 crew begins their journey home. pic.twitter.com/N0e5Bxo6D4
— Axiom Space (@Axiom_Space) April 25, 2022
சுற்றுலாப் பயணிகள் பூமியில் இருந்து சுமார் 420 கிலோ மீற்றர் தொலைவில் விண்வெளி பயணம் மேற்கொண்டனர். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு முதல் முறையாக சுற்றுலா சென்ற பயணிகள், தற்போது பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.
16 மணிநேரத்தை அவர்கள் தொடங்கியுள்ள நிலையில், அட்லாண்டிக் கடல் பகுதியில் அவர்களது விண்கலம் வந்து இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Separation confirmed. Dragon will now perform four burns to move away from the @space_station; will reenter the Earth's atmosphere in ~16 hours with a targeted splashdown at approximately 1:06 p.m. ET on April 25 → https://t.co/N3MHSxCS0k
— SpaceX (@SpaceX) April 25, 2022