விண்வெளி பயணம் இனி தமிழகத்திலும் சாத்தியம் - இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கம்!
விண்வெளிக்கு உந்துகணை செலுத்தும் ஏவுதளத்திற்கு அடித்தளம் நாட்டுவதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
தமிழ்நாட்டில் இனி விண்வெளி பயணம்
குலசேகரபட்டினத்தில் உந்துகணை ஏவுதளம் அமைக்க மத்திய அரசும் ஒப்புதல் அளித்து வழங்கியுள்ளதுடன், அதற்கு தேவைப்படும் நிலம் முழுவதும் மாநில அரசினால் கையகப்படுத்தப்பட்டுள்ளதால் ஏவுதளம் அமைக்கும் பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த கட்டுமான பணிகளை அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்க இந்தியப் பிரதமர் மோடி எதிர்வரும் டிசம்பர் மாதம் குலசேகரபட்டினத்திற்கு செல்லவுள்ளார்.
இதைத் தொடர்ந்து குலசேகரபட்டினத்தில் சிறிய ரக உந்துகணைகளை ஏவுவதற்கு வசதியாக ஏவுதளம் அமைக்கப்படவுள்ளது.
இஸ்ரோ தலைவர் சோம்நாத் கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து இது குறித்து விளக்கமளித்திருந்தார்.
மேலும் இது தமிழகத்தில் சாத்தியமாக்கப்பட்டால் இனி தமிழகத்தில் இருந்தும் விண்வெளிக்கு பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |