இரவில் நட்சத்திரங்களை பார்க்க முடியாது - பின்னணியில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் திட்டம்
ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் செயற்கைக்கோள் திட்டங்களால் எதிர்காலத்தில் நட்சத்திரங்களை பார்க்க முடியாது என ESO எச்சரித்துள்ளது.
17 லட்சம் செயற்கைக்கோள்கள்
தகவல் தொடர்பு, அறிவியல் ஆய்வு, வானிலை கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக உலக நாடுகள், விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்பி ஆய்வு செய்து வருகின்றன.
தற்போது சுமார், 16,501 செயற்கைக்கோள்கள் பூமியின் சுற்றுப்பாதையில் சுற்றி வருகின்றன. இதில் எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மட்டும் சுமார் 10,000 மேற்பட்ட செயற்கைகோள்களை விண்ணில் ஏவியுள்ளது.

ஏற்கனவே ஒளி மாசுபாட்டால் பெரு நகரங்களில் வானில் நட்சத்திரங்களை பிரகாசமாக அதிகளவில் காண முடியாமல் உள்ள சூழலில், ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்களால் எதிர்காலத்தில் இரவில் வானில் நட்சத்திரங்களையே பார்க்க முடியாத சூழல் வரும் என ஐரோப்பிய தெற்கு வானாய்வகம்(european southern observatory) நடத்திய ஆய்வு எச்சரித்துள்ளது.
வரும் ஆண்டுகளில் 17 லட்சம் செயற்கைக்கோள்களைப் பூமியின் தாழ் சுற்றுப்பாதையில் செலுத்த விண்வெளி நிறுவனங்கள் முன்மொழிந்துள்ளன.
இதில், அதிகபட்சமாக ஸ்பேஸ் எக்ஸ் 10 லட்சம் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கான திட்டங்களை ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது இவை அதன் இணைய நிறுவனமான ஸ்டார்லிங்க்கிற்காக செயற்கைகோள்களுடன் இணைந்து கொள்ளும்.
பூமியின் சுற்றுப்பாதையில் செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களை அமைப்பது, என பூமியின் சுற்றுப்பாதையில் ஒரு புதிய பொருளாதாரத்தை உருவாக்க ஸ்பேஸ் எக்ஸ் திட்டமிட்டுள்ளது.
நட்சத்திரங்களை பார்க்க முடியாது
இதே போல், இரவில் சூரிய ஒளியை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பெரிய, கண்ணாடி போன்ற செயற்கைக்கோள்களைத் திட்டமிடும் அமெரிக்க ஸ்டார்ட்-அப் நிறுவனமான 'ரிஃப்ளெக்ட் ஆர்பிட்டல்' 2035 ஆம் ஆண்டுக்குள் 55,000 செயற்கைக்கோள்களை ஏவ திட்டமிட்டுள்ளது.

இந்தச் செயற்கைக்கோள்கள், இதுவரை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட பொருட்களிலேயே மிகவும் பிரகாசமானவையாக மாறக்கூடும் எனவும், ஒரு செயற்கைக்கோள் முழு நிலவை விட 4 மடங்கு பிரகாசமாகத் தோன்றக்கூடும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
இரவு வானத்தில் தெரியும் ஒரே நட்சத்திரங்களாக அதன் செயற்கைக்கோள்கள் மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது.
தற்போதுள்ள மற்றும் எதிர்கால செயற்கைக்கோள்களின் மொத்த எண்ணிக்கையை சுமார் 1 லட்சம் ஆகக் கட்டுப்படுத்துவதன் மூலம் மட்டுமே மிக மோசமான பாதிப்புகளைத் தவிர்க்க முடியும், ஆனால் அதனை விட 17 மடங்கு செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்ட உள்ளது.

இப்படி மில்லியன் செயற்கைகோள்கள் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்தால். தொலைநோக்கி எவ்வளவு மேம்பட்டதாக இருந்தாலும், மங்கலான பொருட்களை, தொலைதூர விண்மீன் திரள்கள், மங்கலான புறக்கோள்கள் ஆகியவற்றை தரையிலிருந்து கண்டறியவே முடியாது என ESO எச்சரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |