அமெரிக்காவின் உளவுத் துறையில் எலான் மஸ்க்: விண்ணில் பாய்ந்த SpaceX செயற்கைகோள்
அமெரிக்காவின் சார்பாக புதிய உளவு செயற்கைக்கோளை ஸ்பேஸ்எக்ஸ்(SpaceX) நிறுவனம் விண்ணில் செலுத்தியுள்ளது.
விண்ணில் பாய்ந்த SpaceX செயற்கைக்கோள்
SpaceX நிறுவனம் அமெரிக்காவின் தேசிய உளவு செயல்பாட்டிற்கான(NRO) புதிய உளவு செயற்கைக்கோளை கலிபோர்னியாவின் வாண்டன்பெர்க் விண்வெளிப்படை தளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பில் தனியார் விண்வெளி நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதை இந்த SpaceX நிறுவனத்தின் புதிய செயற்கைக்கோள் ஏவுதல் வெளிக்காட்டுகிறது.

விண்ணில் ஏவப்பட்ட இந்த செயற்கைக்கோள், நாட்டின் உளவு மற்றும் பாதுகாப்பில் தரைவழி மற்றும் வான்வழி கண்காணிப்புகளை விட பல தனித்துவமான நன்மைகளை தரும் என்று NRO சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த செயற்கைக்கோள்கள் SpaceX நிறுவனத்தின் பிரபலமான பால்கன் 9(Falcon 9) ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டுள்ளது.
தனித்துவமான அம்சங்கள்

உளவு செயற்கைக்கோள் மூலமாக, மனிதர்கள் செல்ல முடியாத மோசமான நிலப்பரப்புகளையும் துல்லியமாக கண்காணிக்க முடியும்.
அத்துடன் வழக்கமான முறையிலான உளவு பணிகளின் போது ஏற்படும் மனித உயிர் ஆபத்துகள் இந்த உளவு செயற்கைக்கோள் மூலம் தவிர்க்கப்படும்.
பிற நாடுகளின் இறையாண்மையை மீறாமல் சர்வதேச விதிகளுக்கு உட்பட்ட முறையில் உளவு தகவல்களை திரட்ட முடியும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |