சுனிதா வில்லியம்ஸை அழைத்துவர புறப்பட்ட விண்கலம்: வெளியான வீடியோ
சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை அழைத்து வர விண்கலம் புறப்பட்டது.
சுனிதா வில்லியம்ஸ்
கடந்த ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் ஆய்வுப்பணி மேற்கொண்டனர்.
ஆனால், திட்டமிட்டபடி பூமிக்கு அவர்களால் திரும்ப முடியாததால் 9 மாதங்களாக அங்கேயே தங்கியுள்ளனர்.
Liftoff of Crew-10! pic.twitter.com/OOLMFQgA52
— SpaceX (@SpaceX) March 14, 2025
இருவரையும் மீட்டுவர நாசா எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் உடன் இணைந்து ராக்கெட்டை அனுப்பியுள்ளது.
புறப்பட்ட விண்கலம்
இன்று அதிகாலை, டிராகன் விண்கலத்துடன் பால்கன் 9 ரக ராக்கெட் கிளம்பியது. இதனைத் தொடர்ந்து வருகிற 19ஆம் திகதி சுனிதா, வில்மோர் இருவரும் பூமிக்கு திரும்புவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் தனது X பக்கத்தில் ராக்கெட் புறப்படும் வீடியோவை பகிர்ந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |