இந்திய பெருங்கடலில் விழுந்த Starship., சோதனை வெற்றி என அறிவித்த SpaceX
SpaceX நிறுவனம் தனது Starship ரொக்கெட் சோதனையை வெற்றிகரமாக முடித்ததாக அறிவித்துள்ளது.
இந்த சோதனை இன்று (ஆகஸ்ட் 27) டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள Starbase தளத்தில் நடைபெற்றது.
ரொக்கெட் 2 பகுதிகளாக பிரிந்து, திட்டமிட்டவாறு கடலில் விழுந்தது.
Super Heavy என்ற முதல் பகுதி Gulf of Mexico-வில் கட்டுப்பாடுடன் விழுந்தது, Starship என்ற மேல் பகுதி இந்திய பெருங்கடலில் விழுந்தது.
உலகின் முதல் முழுமையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய Super-Heavy Launch System-ஐ உருவாக்கும் முயற்சியில் முன்னேற்றம் காண்பதே இந்த சோதனையின் முக்கிய நோக்கமாகும்.
Super-Heavy booster, liftoff-க்கு பிறகு சீராக பிரிந்து Descent maneuver, flip, burn ஆகியவற்றைச் செய்து, திட்டமிட்ட இடத்தில் விழுந்தது.
இது booster-ஐ tower-ல் பிடிக்கும் எதிர்கால முயற்சிக்கான அடிப்படை பயிற்சி என SpaceX தெரிவித்துள்ளது.
SpaceX மேல் பகுதி, starlink satellite deployment-ஐ simulation செய்து, near-orbital உயரத்திற்கு சென்றது. இது SpaceX-ன் satellite விநியோக திறனை சோதிக்க உதவியது.
இரு பகுதிகளும் திட்டமிட்டவாறு கடலில் விழுந்த நிலையில், SpaceX இதை மிகப் பாரிய வெற்றி என தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
SpaceX Starship test flight, Starship Indian Ocean splashdown, Super Heavy booster recovery, Elon Musk rocket update, Starship satellite deployment test, SpaceX reusable launch system, Starbase Texas launch, Starship Flight 10 success, SpaceX Starlink simulant test, SpaceX Moon Mars mission goals