ரயில் பயணங்கள் இலவசம்! மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி அறிவித்த பிரபல ஐரோப்பிய நாடு
பிரபல ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் ரயில் பயணங்கள் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணவீக்கம் ஐரோப்பிய நாடுகளை கவலையடையச் செய்தது. இதனால், நாடுகள் பல வழிகளை சந்தித்துவருகையில், ஸ்பெயின் அதிரடியான செயலில் இறங்கியுள்ளது.
ஸ்பெயின் அரசின் புதிய திட்டம் பொது மக்களுக்கு சில ரயில் பயணங்களை முற்றிலும் இலவசமாக்குகிறது.
ரென்ஃபே (Renfe) என்ற ரயில்வே நெட்வொர்க்கின் சில பகுதிகளுக்கு பயணம் இலவசம் என்று ஸ்பெயின் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் செப்டம்பர் 1-ஆம் திகதி முதல் அமலுக்கு வந்து, ஆண்டு இறுதி வரை தொடரும். ரென்ஃபே என்பது அரசுக்கு சொந்தமான ஒரு இரயில் வலையமைப்பு ஆகும்.
Renfe (Image Wikimedia Commons)
ஏற்கெனெவே, போக்குவரத்து கட்டணத்தில் 30 சதவீதம் குறைக்கப்படுவதாக ஸ்பெயின் அரசு அறிவித்துள்ளது. இதில் மெட்ரோக்கள், பேருந்துகள் மற்றும் டிராம்கள் அடங்கும்.
பயணிகள் சேவைகள் மற்றும் 300 கிமீக்கு குறைவான, நடுத்தர தூர வழிகளில் பல பயணங்களுக்கு இலவச ரயில் பயண திட்டம் பொருந்தும். ஸ்பெயினில் சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் முக்கியமாக இந்தத் திட்டத்தில் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் பல பயண ரயில் டிக்கெட்டுகளை வாங்கும் சுற்றுலாப் பயணிகளும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Atocha train station in Madrid (Image: AP)