Euro 2024: குரோஷியாவை மொத்தமாக காலி செய்த ஸ்பெயின்
யூரோ 2024 கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தியது.
மொரட்டா கோல்
பெர்லினில் நேற்று நடந்த யூரோ 2024 போட்டியில் குரோஷியா மற்றும் ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் ஆல்வரோ மொரட்டா (Alvaro Morata) அசால்ட்டாக கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து அடுத்த மூன்று நிமிடங்களில் அதே அணியின் ஃபேபியன் ருய்ஸ் அடித்த கிக், எதிரணி வீரரின் கால்களுக்குள் புகுந்து கோலாக மாறியது.
மூன்றாவது கோல்
குரோஷியா வீரர்கள் ஸ்பெயின் அணியை கட்டுப்படுத்த முயல்வதற்குள் மூன்றாவது கோல் அந்த அணிக்கு கிடைத்தது.
காற்றில் பறந்துவந்த பந்தை டேனி கார்வாஜல் விரைந்து வந்து வலைக்குள் திருப்பி கோலாக மாற்றினார்.
இரண்டாம் பாதியில் ஸ்பெயின் அணிக்கு குரோஷியா நெருக்கடி கொடுத்தாலும் இறுதிவரை கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஸ்பெயின் 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |