முதல் அணியாக அரையிறுதியில் நுழைந்த ஸ்பெயின்! கூடுதல் நேரத்தில் விழுந்த கோல்
மகளிர் உலகக்கோப்பை காலிறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி 2-1 என நெதர்லாந்தை வீழ்த்தியது.
பெனால்டியில் முதல் கோல்
ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான காலிறுதிப் போட்டி வெல்லிங்டன் ரீஜினல் மைதானத்தில் நடந்தது.
Marty MELVILLE / AFP
ஆட்டம் தொடங்கி 80 நிமிடம் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 81வது நிமிடத்தில் நெதர்லாந்து வீராங்கனையின் கையில் பந்து பட்டதால் ஸ்பெயின் அணிக்கு பெனால்டி கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து மரியோனா கால்டெண்டே அடித்த ஷாட் கோல் போஸ்ட் கம்பத்தில் பட்டு கோல் ஆனது.
ஸ்பெயின் வெற்றி
அதன் பின்னர் நெதர்லாந்து அணி வீராங்கனை 90+1வது நிமிடத்தில் ஸ்டெபானி கோல் அடித்தார். 90 நிமிடங்கள் முடிந்தபோது 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமநிலையில் இருந்தது.
Twitter (FIFAWWC)
பின்னர் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் (111வது நிமிடம்) ஸ்பெயினின் சல்மா செலஸ்டி வெற்றி கோல் அடித்தார்.
இதன்மூலம் ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது.
Getty
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |