மொத்தமாக 65,000 சுற்றுலா வாடகை விடுதிகளை முடக்கிய ஐரோப்பிய நாடு
ஸ்பெயினின் நுகர்வோர் உரிமைகள் அமைச்சகம் திங்களன்று Airbnb-ஐ அதன் தளத்திலிருந்து 65,000க்கும் மேற்பட்ட விடுமுறை வாடகை விடுதிகளை நீக்க உத்தரவிட்டதாகக் கூறியது.
விடுமுறை வாடகை விடுதி
ஏற்கனவே உள்ள விதிகளை மீறியதாலையே விடுமுறை வாடகை விடுதிகளை நீக்க உத்தரவிட்டதாக நுகர்வோர் உரிமைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஸ்பெயின் அரசாங்கமும் நகர சபைகளும் பிராந்திய அதிகாரிகளும் Airbnb மற்றும் Booking.com போன்ற தளங்கள் வழியாக சுற்றுலா வாடகை விடுதிகள் மீது பொதுவான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.
இப்படியான நிறுவனங்கள் நாட்டில் அதிகப்படியான சுற்றுலா வருகையை உருவாக்குகிறது என்றும் வீட்டுவசதிப் பங்குகளை முடக்கி உள்ளூர்வாசிகளுக்கு வாடகைக்கு கட்டுப்படியாகாது என்ற நிலையை உருவாக்குவதாக பல ஸ்பெயினியர்கள் கூறுகின்றனர்.
மட்டுமின்றி, வெளிநாட்டவர்களால் தங்கள் தனியுரிமை பாதிக்கப்படுவதாகவும் பல நகரங்களில் மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். முடக்கப்பட வேண்டிய பெரும்பாலான Airbnb பட்டியல்களில் அவற்றின் உரிம எண் சேர்க்கப்படவில்லை.
முடிவுக்குக் கொண்டுவருவதே
அதேவேளை உரிமையாளர் ஒரு தனிநபரா அல்லது ஒரு நிறுவனமா என்பதை மற்றவர்கள் குறிப்பிடவில்லை என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், விடுமுறை வாடகை வணிகத்தில் பொதுவான கட்டுப்பாட்டு இல்லாமை மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவதே தனது குறிக்கோள் என்று நுகர்வோர் அமைச்சர் பாப்லோ பஸ்டின்டுய் கூறியுள்ளார்.
எதிர்வரும் 2028 ஆம் ஆண்டுக்குள் சுற்றுலா வாடகை விடுதிகளை முற்றிலுமாக தடை செய்யும் இதுவரையான ஸ்பெயினின் மிகக் கடினமான நடவடிக்கையை கடந்த ஆண்டு ஜூன் மாதம் பார்சிலோனா மேயர் ஜாம் கோல்போனி எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |