ஹெலிகொப்டர் விபத்தில் ஜேர்மன் நிறுவன சிஇஓ மனைவி மற்றும் 3 பிள்ளைகளுடன் உயிரிழந்த சோகம்
அமெரிக்காவில் ஹெலிகொப்டர் நதியில் விழுந்த விபத்தில், ஸ்பெயின் சிஇஓ குடும்பத்துடன் பலியானது தெரிய வந்துள்ளது.
ஹெலிகொப்டர் விபத்து
நியூயார்க் நகரின் ஹட்சன் நதியில் ஹெலிகொப்டர் விழுந்த விபத்தில், அதில் பயணித்த 6 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பலியானவர்களின் அடையாளம் தற்போது தெரிய வந்துள்ளது. ஜேர்மனின் Siemens என்ற பொறியியல் நிறுவனத்திற்கு பல நாடுகளில் கிளைகள் உள்ளன.
அவற்றில் ஸ்பெயினின் சிஇஓ அகஸ்டின் எஸ்கோபார், தனது மனைவி மெர்ஸ் காம்ப்ருபியுடன் உயிரிழந்துள்ளார் என அடையாளம் தெரிந்துள்ளது.
அமெரிக்காவுக்கு சுற்றுலா
மேலும் அவர்களது நான்கு, ஐந்து, 11 வயதுடைய மூன்று பிள்ளைகளும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் 36 வயதான விமானியும் அவர்களுடன் பலியாகினார். இதற்கிடையில் அகஸ்டின் தனது குடும்பத்துடன் சுற்றுலாவுக்கு அமெரிக்கா வந்ததாக தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |