சியூட்டா எல்லை விவகாரம்: ஐரோப்பா மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிய ஸ்பெயின்
சியூட்டா எல்லை விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் பலவும் சுயநலமாக நடந்து கொண்டு இருப்பதாக ஸ்பெயின் குற்றஞ்சாட்டியுள்ளது.
சியூட்டா எல்லை விவகாரம்
வியாழக்கிழமையன்று மொராக்கோவில் இருந்து கிட்டத்தட்ட 500000 மக்கள் ஸ்பெயினின் சியூட்டா(Ceuta) பகுதிக்குள் ஒரே நேரத்தில் முயன்றது, ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

இதையடுத்து முக்கிய கொள்கை மாற்றமாக, ஸ்பெயின் உடனான விசா மற்றும் கடவுச் சீட்டு இல்லாத ஷெங்கன் பயண முறையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இத்தாலி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளை குற்றஞ்சாட்டிய ஸ்பெயின்
சியூட்டா எல்லை விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் பலவும் சுயநலமாக நடந்து கொண்டு இருப்பதாக ஸ்பெயின் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளின் நிலைப்பாடு மிகவும் பொறுப்பற்றதாகவும், ஒற்றுமையற்றதாகவும் இருப்பதாக ஸ்பெயின் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், ஸ்பெயின் எல்லை விவகாரத்தை சில ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் தங்களது உள்நாட்டு அரசியல் லாபத்திற்கு பயன்படுத்த முயல்வதாக ஸ்பெயின் உள்துறை அமைச்சர் பெர்னாண்டோ கிரான்டே குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்பெயின் ஆப்பிரிக்காவுடன் நேரடியாக எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இந்த நிலை வேறு எந்த ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடுகளுக்கு ஏற்படவில்லை.
சியூட்டா எல்லை விவகாரத்தில் பெரும்பாலான நாடுகள் ஆதரவு தெரிவித்தாலும், சில நாடுகள் தங்கள் சுயநலத்திற்காக எடுக்கும் சில முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் கிரான்டே தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |