ஐரோப்பாவில் முதல் பலி பதிவானது... ஆப்பிரிக்காவுக்கு வெளியே இது இரண்டாவது

London Spain Monkeypox Death
By Arbin Jul 29, 2022 09:46 PM GMT
Report

கொரோனாவுக்கு பிறகு உலக நாடுகளை அச்சுறுத்த தொடங்கியுள்ள குரங்கம்மை தொற்றுக்கு ஸ்பெயின் நாட்டில் ஒருவர் மரணமடைந்துள்ளது, ஐரோப்பாவில் முதல் பலி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் பரவிவந்த குரங்கம்மை தொற்றானது, அந்த நாடுகளுக்கு வெளியே தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. கடந்த வாரம் மட்டும் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் குரங்கம்மை தொற்றுக்கு ஐவர் பலியானதாக உலக சுகாதார அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், வெள்ளிக்கிழமை வெளியான தகவலில் ஆப்பிரிக்காவுக்கு வெளியே பிரேசில் நாட்டில் குரங்கம்மை தொற்றுக்கு முதல் பலி பதிவானது. கடந்த சனிக்கிழமை தான், குரங்கம்மை தொற்று வேகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டு சுகாதார அவசரநிலையை பிரகடனம் செய்திருந்தது உலக சுகாதார அமைப்பு.

ஐரோப்பாவில் முதல் பலி பதிவானது... ஆப்பிரிக்காவுக்கு வெளியே இது இரண்டாவது | Spain Confirms Europe First Monkeypox Death

75 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் மொத்தம் 16,000 பேர்களுக்கு குரங்கம்மை தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது என உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இதனிடையே, நாட்டில் 4,298 பேர்களுக்கு குரங்கம்மை தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஸ்பெயின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில் 120 பேர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாகவும் ஸ்பெயின் சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஐரோப்பாவில் குரங்கம்மை தொற்றுக்கு பலியாகும் முதல் நபர் இவரென குறிப்பிட்டுள்ள நிலையில், மேலதிக தகவல்களை வெளியிடவும் ஸ்பெயின் சுகாதார அமைச்சகம் மறுத்துள்ளது.

பிரித்தானியா, கனடா, அமெரிக்கா உட்பட பல நாடுகளில் குரங்கம்மை தொற்றானது வேகமெடுத்துவருவதால் பொது சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குரங்குகளில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட இந்த தொற்றானது, தற்போது மனிதர்களில் வேகமாக பரவி வருகிறது.

தொற்று பாதிக்கப்பட்டால் 6-ல் இருந்து 13 நாட்களுக்கு பின்னர் அறிகுறிகள் தென்படும் எனவும் 5-ல் இருந்து 21 நாட்கள் வரையில் நீடிக்கும் எனவும் மருத்துவ நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஐரோப்பாவில் முதல் பலி பதிவானது... ஆப்பிரிக்காவுக்கு வெளியே இது இரண்டாவது | Spain Confirms Europe First Monkeypox Death

உடல் தொடர்பினால் இன்னொருவருக்கு வேகமாக பரவும் எனவும், பாதிக்கப்பட்டவர்களை தொடுவதாலும், அவர்கள் பயன்படுத்திய உடைகளை உடுத்துவதாலும், அவர்கள் பயன்படுத்திய படுக்கையில் படுப்பதாலும் குரங்கம்மை தொற்று பரவ வாய்ப்புகள் அதிகம்.

ஆனால் இருமல், தும்மல் உள்ளிட்டவையால் குரங்கம்மை பரவும் வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றே கூறுகின்றனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களுடன் உடல் ரீதியான நெருக்கத்தில் ஈடுபடுவதால் ஆபத்து அதிகம் எனவும், இருப்பினும், அதனால் குரங்கம்மை தொற்று பரவுகிறதா என்பதும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

இதுவரை குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்ட பெரும்பாலானவர்கள் தன்பால் ஈர்ப்பாளர்கள் மற்றும் இருபால் ஈர்ப்பாளர்கள் என்றே கண்டறியப்பட்டுள்ளது.

ஜூலை 21ம் திகதி வரையான தகவலில், பிரித்தானியாவில் 2,208 பேர்களுக்கு குரங்கம்மை தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் லண்டன்வாசிகள் என்றே தெரியவந்துள்ளது.

மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US