இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்களுடன் சென்ற கப்பல்., நிறுத்த அனுமதிக்காத ஸ்பெயின்
இந்தியாவில் இருந்து இஸ்ரேலுக்கு வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலை தனது துறைமுகத்தில் நிறுத்த ஸ்பெயின் அனுமதி மறுத்துள்ளது.
டேனிஷ் கொடியுடன் கூடிய இந்த கப்பல் சென்னையில் இருந்து இஸ்ரேலின் ஹைபா துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்தது.
ஸ்பெயினின் தென்கிழக்கில் உள்ள கடாஜினா துறைமுகத்தில் மே 21-ஆம் திகதி Marianne Danica என்ற ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் கப்பல் நின்று செல்ல அனுமதி கோரியதாக தனக்கு தகவல் கிடைத்ததாகவும், ஆனால் அதனை அங்கு நிறுத்த அனுமதிக்கப்படவில்லை என்று ஸ்பெயினின் வெளியுறவு அமைச்சர் Jose Manuel Albares கூறினார்.
மத்திய கிழக்கிற்கு அதிக ஆயுதங்கள் தேவையில்லை. அங்கு அமைதி தேவை என்று கூறிய அவர், அந்தக் கப்பல் குறித்த கூடுதல் தகவல்களை தெரிவிக்க மறுத்துவிட்டார்.
இந்த கப்பலில் 27 டன் வெடிபொருட்கள் ஏற்றப்பட்டிருந்ததாக ஸ்பெயின் நாட்டு செய்தித்தாள் 'எல் பைஸ்' தெரிவித்துள்ளது.
சென்னை துறைமுகத்தில் இருந்து இஸ்ரேலில் உள்ள ஹைஃபா துறைமுகத்திற்கு செல்கிறது. ஆனால், இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறையிலிருந்தும் தெளிவான பதில் எதையும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India Spain Israel Israel Hamas War, Ship