ஸ்பெயின் நாட்டை நள்ளிரவில் உலுக்கிய நிலநடுக்கம்
ஸ்பெயின் நாட்டை நள்ளிரவில் நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது.
ஸ்பெயின் நாட்டிலுள்ள கிரனாடா நகரை ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவான நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது.
நள்ளிரவில் உலுக்கிய நிலநடுக்கம்
நள்ளிரவு 1.00 மணியளவில் கிரனாடா நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து வீடுகளில் வாழும் உள்ளூர் மக்களும் ஹொட்டல்களில் தங்கியிருக்கும் சுற்றுலாப்பயணிகளும் அலறியடித்துக்கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

பல வீடுகள் நிலநடுக்கத்தால் சேதமடைந்துள்ள நிலையில், சாலைகளில் பிளவு ஏற்பட்டுள்ளதை வெளியாகியுள்ள புகைப்படங்களில் காணலாம்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அதிகாரிகள் அவசர நிலை பிறப்பித்துள்ளதாக தெரிவித்துள்ள Andalusia அரசின் துணைத்தலைவரான Antonio Sanz Cabello, மக்கள் கட்டிடங்களுக்குள் செல்லவேண்டாம் என்றும், இடிந்து விழும் நிலையிலுள்ள எதன் அருகிலும் நிற்கவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், முதல் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து Gojar என்னும் கிராமத்தின் அருகே மீண்டும் ரிக்டர் அளவுகோலில் 2.6ஆக பதிவான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
ஸ்பெயினைப் பொருத்தவரை, பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படுவது அபூர்வம் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |