நெருப்பு மோதிர சூரிய கிரகணம் - ரூ.4018 கோடி வருமானம் எதிர்பார்க்கும் நாடு
ஆகஸ்டடில் வர உள்ள சூரிய கிரகணத்தை வைத்து ரூ.4018 கோடி வருமானம் ஈட்ட நாடொன்று திட்டமிட்டுள்ளது.
நெருப்பு மோதிர சூரிய கிரகணம்
பொதுவாக சூரியக் கிரகணத்தின் போது நிலவு, சூரியனை முழுமையாக மறைக்கும். ஆனால் அடுத்து வர உள்ள சூரிய கிரகணத்தில் நிலவு பூமிக்கு மிகத் தூரமான பாதையில் பயணிக்கும் போது நிகழ்வதால் நிலவின் அளவு சூரியனை விடச் சிறியதாகத் தெரியும்.

இதனால், சூரியனை முழுவதுமாக மறைக்க முடியாமல் அதன் மையத்தில் மட்டும் மறைத்து நெருப்பு மோதிரம் போன்ற அரிய காட்சி உருவாகும்.
வரும் ஆகஸ்ட் 12 ஆம் திகதி கிழக்கு பகல் நேரப்படி (EDT) காலை 11:34 மணிக்குத் தொடங்கி, ஆகஸ்ட் 12 அன்று மாலை 6:55 மணிக்கு முடிவடையும்.
ஆனால், இந்த கிரணம் இந்தியாவில் இரவு நேரத்தில் வருவதால் இந்தியாவில் இருந்து இதை பார்க்க முடியாது.
ஐரோப்பா, வடக்கு ஸ்பெயின், கனடா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, வடகிழக்கு ரஷ்யா, அட்லாண்டிக் பெருங்கடல் மண்டலங்கள் ஆகியவற்றில் இருந்து மட்டுமே காட்சியளிக்கும்.
கோடிகளை எதிர்பார்க்கும் ஸ்பெயின்
ஐபீரிய தீபகற்பத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு மட்டுமே இது 100% முழுமையாக காட்சியளிக்க உள்ளதால், இதனை வைத்து பாரிய வருமானம் ஈட்ட ஸ்பெயின் அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து பேசியுள்ள ஸ்பெயின் சுற்றுலாத் துறைத் தலைவர் கிமெனா லமேடோ, "கோட்டோ பெல்லோ காட்சிமுனைக்கு அருகில் உள்ள ஒரு புதிய காட்சி மேடை, கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 1,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

இது காண்டேப்ரியன் மலைகள் முழுவதும் 270 டிகிரி கோணத்தில் காட்சிகளை வழங்குகிறது. கிரகணத்தைக் காண்பதற்கு அஸ்டூரியாஸ் உலகின் சிறந்த இடங்களில் ஒன்றாகத் தனித்து நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.
பார்வையாளர்கள் இந்த நிகழ்வைத் தொடக்கம் முதல் இறுதி வரை காணும் வகையில், சூரியன் அடிவானத்திற்கு மேலே போதுமான நேரம் நிலைத்திருக்கும்.
இந்த நிகழ்வை காண மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் வருவார்கள் என்றும், சுற்றுலா மூலம் 312 மில்லியன் பவுண்டுகள்(இந்திய மதிப்பில் ரூ.4018 கோடி) வருவாய் கிடைக்கும் என்றும் அதிகாரிகள் கணித்துள்ளனர்.
அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பா முழுவதிலிருந்தும் பல மாதங்களாக அறைகள் முன்பதிவுகள் குவிந்து வருகின்றன. அவிலேஸில் உள்ள ஆடம்பர ஹோட்டல்களில் அறைகள் முன்பதிவு முழுவதுமாக முடிந்து விட்டது.
கிரகண வாரத்திற்காகத் தங்களின் உள்நாட்டு ஹோட்டல்கள் அனைத்தும் கிட்டத்தட்ட நிரம்பிவிடும் நிலையில் இருப்பதாக, அரசுக்குச் சொந்தமான பாரடோர்ஸ் ஹோட்டல் சங்கிலி தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |