40 ஆண்டு காலத்தில் இல்லாத வெப்பம்...பரிதவிக்கும் ஸ்பெயின் மக்கள்
ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் ஜூன் மாத வெப்பநிலையானது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்து காணப்படுகிறது.
ஜூன் மாத தொடக்கத்தில் இருந்தே ஸ்பெயினில் வெப்பகாற்றானது வழக்கத்துக்கு மாறாக அதிகரித்தே காணப்படுகிறது, இதனால் ஸ்பெயினில் இரவு நேர வெப்பநிலையும் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், ஸ்பெயினின் சிலபகுதியில் வெப்பநிலையானது 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது.
இதனால் தலைநகர் மாட்ரிட்டில் பொதுமக்கள் நீருற்றுகளில் விளையாடியும், மரங்களில் நிழலில் படுத்தும் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வெப்பத்தை தணித்து வருகின்றனர்.
கூடுதல் செய்திகளுக்கு: வீழ்த்தப்பட்ட ரஷ்ய போர் விமானம்...அரை நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட விமானி: அதிர்ச்சி வீடியோ!
ஸ்பெயினில் அதிகரித்துள்ள இந்த வெப்பநிலையானது ஆப்பிரிக்காவில் இருந்து வரும் சூடான வெப்பக் காற்றே காரணம் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.