ஸ்பெயின் வெள்ளப்பெருக்கில் சிக்கி பிரித்தானிய தம்பதி உயிரிழப்பு: மகள் வழங்கிய சோக செய்தி
ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பிரித்தானிய தம்பதி உயிரிழந்துள்ளனர்.
பிரித்தானிய தம்பதி உயிரிழப்பு
கடந்த வாரம் ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கில் சிக்கி பிரித்தானிய தம்பதி உயிரிழந்து இருப்பதாக அவர்களது மகள் தெரிவித்துள்ளார்.
ஸ்கை நியூஸ் செய்தி நிறுவனத்திடம் Ruth O'Loughlin மற்றும் Renee Turner ஆகியோர் வழங்கிய தகவலில், பெட்ரால்பாவைச் (Pedralba) சேர்ந்த 78 வயது டான் மற்றும் 74 வயது டெர்ரி ஆகிய தங்கள் பெற்றோர்கள் வெள்ள பாதிப்புகளில் சிக்கி காணாமல் போயினர்.
மேலும் காணாமல் போன சில நாட்களுக்கு பிறகு தங்களது பெற்றோர்களின் உடல் அவர்களது காரில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
O'Loughlin கடைசியாக அவரது தாயுடன் கடந்த வார திங்கட்கிழமை பேசியதாக தெரிவித்துள்ளார்.
ஸ்பெயின் வெள்ளப்பெருக்கு
கிழக்கு ஸ்பெயினில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தது 217 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆயிரக்கணக்கான கார்கள் சாலையில் சேதமடைந்து இருப்பதுடன் இன்னும் பல கார்கள் காணாமல் போயுள்ளன.
மேலும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு பாதுகாப்பான இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |