புலம்பெயர் மக்களுக்கு குடியுரிமை கடும் சிக்கலில் முடியும்: ஐரோப்பிய நாடொன்றிற்கு எச்சரிக்கை

Spain Europe Migrants
By Arbin Feb 03, 2026 09:28 AM GMT
Report

500,000 புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்க ஸ்பெயின் திட்டமிட்டுள்ளதற்கு, வலதுசாரி எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஒரு வருடம் வரை

ஸ்பெயின் அரசாங்கத்தின் இந்த முடிவு ஊடுருவலைத் தீவிரப்படுத்தும் எனவும், வீட்டுவசதி நெருக்கடியை மோசமாக்கும் என்றும் பொது சேவைகளைச் சீர்குலைக்கும் எனவும் எச்சரித்துள்ளனர்.

புலம்பெயர் மக்களுக்கு குடியுரிமை கடும் சிக்கலில் முடியும்: ஐரோப்பிய நாடொன்றிற்கு எச்சரிக்கை | Spain Fury Over Migrants Residency

ஸ்பெயின் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை, ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நிகழ்ந்து வரும் கடுமையான குடியேற்றக் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணாக உள்ளது.

மட்டுமின்றி, நாடாளுமன்றத்தில் ஆளும் கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், இந்த முன்முயற்சியானது அரச ஆணை மூலம் அங்கீகரிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைமுறைக்கு வரும் இந்த கொள்கை, தகுதியுள்ள புலம்பெயர்ந்தோருக்கு ஒரு வருடம் வரை வதிவிட அனுமதியையும் பணி அனுமதியையும் பெற அனுமதிக்கும்.

Designer Baby சாம்ராஜ்யத்தை உருவாக்கத் திட்டமிட்ட எப்ஸ்டீன்: புதிய ஆவணங்களில் சிக்கிய தகவல்

Designer Baby சாம்ராஜ்யத்தை உருவாக்கத் திட்டமிட்ட எப்ஸ்டீன்: புதிய ஆவணங்களில் சிக்கிய தகவல்

இந்த நிலையில், உள்நாட்டு எதிர்க்கட்சிகள் மற்றும் டெஸ்லா நிறுவனரும் பெரும் கோடீஸ்வரருமான எலோன் மஸ்க்கின் கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் பிரதமர் பெட்ரோ சான்செஸ் இந்த திட்டத்தை ஆதரித்தார்.

மேலும், ஸ்பெயின் எப்போதும் கண்ணியம், சமூகம் மற்றும் நீதி ஆகிய பாதையைத் தெரிவு செய்கிறது என்றும் வாதிட்டுள்ளார். ஆனால் Popular Party தலைவரான Alberto Núñez Feijóo இந்த திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளதுடன், இது வீட்டுவசதி நெருக்கடியை உருவாக்கி, நாட்டில் பொது சேவையை சீர்குலைக்கும் என்றார்.

புலம்பெயர் மக்களுக்கு குடியுரிமை கடும் சிக்கலில் முடியும்: ஐரோப்பிய நாடொன்றிற்கு எச்சரிக்கை | Spain Fury Over Migrants Residency

மேலும், வாடகை மற்றும் வீட்டு விலைகள் சாதனை உச்சத்தை எட்டிவரும் வேளையிலும், உழைக்கும் வர்க்கக் குடும்பங்கள் நகரங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு வரும் நிலையிலும் இந்தத் திட்டம் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்படுகிறது என்றார்.

பல ஆயிரம் மக்கள் குடியிருப்பு பற்றாக்குறையால் அவதிப்படும் நிலையில், தற்போது இப்படியான ஒரு திட்டம், கண்டிப்பாக நிலைமையை இன்னும் மோசமடையச் செய்யும் என்றார்.

புலம்பெயர் மக்களுக்கு குடியுரிமை கடும் சிக்கலில் முடியும்: ஐரோப்பிய நாடொன்றிற்கு எச்சரிக்கை | Spain Fury Over Migrants Residency

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு

2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஸ்பெயினில் குறைந்தபட்சம் ஐந்து மாதங்கள் வசித்த, குற்றப் பின்னணி இல்லாத ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரும், அந்த ஆண்டின் இறுதிக்குள் புகலிடம் கோரி விண்ணப்பித்தவர்களும், விரைவுபடுத்தப்பட்ட வதிவிட அனுமதிக்குத் தகுதி பெறுவார்கள்.

இந்த அனுமதி ஓராண்டு செல்லுபடியாகும், ஆனால் நீட்டித்துக் கொள்ளலாம். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, சிறப்பு வதிவிட அனுமதி பெற்றவர்கள் ஸ்பெயினின் குடிமக்களாக அங்கீகரிக்கப்படுவார்கள்.

விண்ணப்பதாரர்கள் லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலோ அல்லது அகதிகளாக இருந்தாலோ, அதற்கு முன்னதாகவே உரிமம் அளிக்கப்படும்.

புலம்பெயர் மக்களுக்கு குடியுரிமை கடும் சிக்கலில் முடியும்: ஐரோப்பிய நாடொன்றிற்கு எச்சரிக்கை | Spain Fury Over Migrants Residency

இதனிடையே, கடந்த வாரம் பார்சிலோனாவின் எய்சாம்பிளே மாவட்டத்தில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே, தங்களுக்குக் குற்றப் பின்னணி இல்லை என்பதைக் காட்டும் சான்றிதழ்களுக்கு விண்ணப்பிப்பதற்காக நூற்றுக்கணக்கான பாகிஸ்தான் நாட்டினர் வரிசையில் காத்திருந்தனர்.

கடந்த மூன்று ஆண்டுகளில், ஸ்பெயினின் மக்கள் தொகை 1.5 மில்லியன் அதிகரித்து 48.9 மில்லியனாக உயர்ந்துள்ளது. இந்த அதிகரிப்பில் ஏறக்குறைய முழுமையும் குடியேற்றத்தினாலேயே ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் வந்தவர்களில் 70 சதவீதம் பேர் லத்தீன் அமெரிக்க மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US