மூன்று ஆண்டுகளுக்கு சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதித்துள்ள நாடு
வருவாய்க்காக சுற்றுலாவை மட்டுமே நம்பியிருக்கும் நாடுகள் உண்டு. ஆனால், சமீப காலமாக சில நாடுகள் சுற்றுலாப்பயணிகள் வருகையை தொல்லையாக நினைக்கத் துவங்கியுள்ளன.
அந்த நாடுகள் வரிசையில் தற்போது ஸ்பெயின் நாடும் சேர்ந்துள்ளது!
சுற்றுலாப்பயணிகளுக்கு தடை
ஆம், மூன்று ஆண்டுகளுக்கு சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதித்துள்ளது ஸ்பெயின் நாடு.
ஸ்பெயினுக்கு சுற்றுலா வரும் சுற்றுலாப்பயணிகள், 10 வீடுகளில் ஒன்றை வாடகைக்கு எடுப்பதாகக் கூறப்படுகிறது.
ஆக, உள்ளூர்வாசிகளுக்கு வீடு கிடைப்பதில் பிரச்சினை ஏற்படுவதாகவும், அதிக சுற்றுலாப்பயணிகளால் மக்கள் கூட்டம் ஏற்படுவதாகவும் மக்கள் கருதுகிறார்கள்.
ஆகவே, அந்நாட்டிலுள்ள 43 மாவட்டங்கள், சுற்றுலாப்பயணிகள் வீடுகளை வாடகைக்கு எடுக்க தடை விதித்துள்ளன.
நேற்று முன்தினம், அதாவது செவ்வாயன்று அமுலுக்கு வந்த இந்த தடை, மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
ஸ்பெயின், பிரித்தானியர்கள் விரும்பி சுற்றுலா செல்லும் சுற்றுலாத்தலம் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |