ஸ்பெயினில் நிகழ்ந்த கோர ரயில் விபத்து: பதவியை ராஜினாமா செய்த போக்குவரத்து துறை அமைச்சர்

Spain Accident Train
By Thiru Nov 04, 2026 12:05 AM GMT
Report

ஸ்பெயின் ரயில் விபத்தில் 96 பேர் வரை உயிரிழந்த நிலையில், அந்நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஸ்பெயின் ரயில் விபத்து

கடந்த வார புதன்கிழமை காலை டோலிடோ மாகாணத்தின் உர்தா பகுதிக்கு அருகே அரசுக்குச் சொந்தமான 'ரென்ஃபே' (Renfe) நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு ரயிலும், தனியார் ரயில் நிறுவனமான 'ஐரியோ' (Iryo)-விற்கு சொந்தமான மற்றொரு ரயிலும் மோதிக் கொண்டு பெரும் விபத்து நிகழ்ந்தது.

இதில் சுமார் 96 பேர் வரை உயிரிழந்ததுடன், நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.

ஸ்பெயினில் நிகழ்ந்த கோர ரயில் விபத்து: பதவியை ராஜினாமா செய்த போக்குவரத்து துறை அமைச்சர் | Spain Minister Resign After Train Accident

இதையடுத்து நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்கள், ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் போக்குவரத்து துறை அமைச்சர் உடனடியாக இந்த விபத்திற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று போராட்டங்களை தீவிரப்படுத்தி இருந்தனர்.

ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அந்நாட்டின் போக்குவரத்து மற்றும் நிலையான நகர்வுக்கான அமைச்சர் ஆஸ்கர் புவென்டே, விபத்துக்கான காரணத்தை கண்டறிய அரசு தீவிரமாக விசாரணை செய்து வருவதாகவும், நான் பதவியில் நீடிக்க வேண்டுமா, இல்லையா என்பது குறித்து பேசிவது என்னுடைய கடமை இல்லை. நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினைக்கான தீர்வு குறித்து சிந்திப்பது மட்டுமே என்னுடைய முதன்மையான பணி என்று தெரிவித்து இருந்தார்.

ஹாலோவீன் பார்ட்டியில் நடந்த கத்திக்குத்து: மூன்றாவது சிறுவனை கைது செய்த பொலிஸார்

ஹாலோவீன் பார்ட்டியில் நடந்த கத்திக்குத்து: மூன்றாவது சிறுவனை கைது செய்த பொலிஸார்

பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்

இந்நிலையில் ஸ்பெயின் நாட்டை உலுக்கிய ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று அமைச்சர் ஆஸ்கர் புவென்டே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

ஸ்பெயினில் நிகழ்ந்த கோர ரயில் விபத்து: பதவியை ராஜினாமா செய்த போக்குவரத்து துறை அமைச்சர் | Spain Minister Resign After Train Accident

இது தொடர்பாக பொதுமக்களிடையே உரையாற்றிய அமைச்சர் புவென்டே, நாட்டில் ஒரே ஆண்டில் இரண்டு பெரும் ரயில் விபத்துகள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த பதவியில் நான் நீடிப்பது நியாயமானதாக இருக்காது என்று தெரிவித்தார்.

அத்துடன் விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே நான் என்னுடைய பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்து விட்டதாகவும், ஆனால் அந்த முடிவை இதுவரை வெளியிடாமல் இருந்ததாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

மேலும், இது அரசியல் நாகரிகம், பொறுப்புக்கூறல் மற்றும் உயிரிழந்தவர்களுக்கு மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அளிக்கும் மரியாதை என்று குறிப்பிட்டுள்ளார். 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US