ஐரோப்பிய நிறுவனத்திடம் 25 அதிநவீன போர் விமானங்களை வாங்கும் நேட்டோ உறுப்பு நாடு
நேட்டோ உறுப்பு நாடான ஸ்பெயின் அதன் விமானப்படையை நவீனப்படுத்தும் விதமாக மேலும் 25 அதிநவீன போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
25 விமானங்களுக்கு ஒப்பந்தம்
ஐரோப்பிய நிறுவனமான Airbus இடமிருந்தே அதிநவீன Eurofighter போர் விமானங்களை ஸ்பெயின் வாங்க உள்ளது. ஏற்கனவே 20 அதிநவீன Eurofighter போர் விமானங்களை வாங்க 2022ல் ஸ்பெயின் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், தற்போது மேலும் 25 விமானங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதனால் ஸ்பெயின் விமானப் படையில் தற்போது பயன்பாட்டில் உள்ள F-18 ரக போர் விமானங்களுக்கு ஓய்வளிக்கப்படும். எதிர்வரும் 2030 முதல் இந்த விமானங்கள் ஸ்பெயினுக்கு வழங்கப்பட உள்ளது.
விமானங்கள் அனைத்தும் மாட்ரிட்டுக்கு வெளியே உள்ள ஏர்பஸ்ஸின் கெட்டஃபே தளத்தில் அசெம்பிள் செய்யப்பட்டு, சோதனை முன்னெடுக்கப்பட்டு டெலிவரி செய்யப்படும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
115 என அதிகரிக்கும்
இத்துடன் ஸ்பெயின் விமானப் படையில் Eurofighter போர் விமானங்களின் எண்ணிக்கை 115 என அதிகரிக்கும். மட்டுமின்றி, ஸ்பெயின் அரசாங்கத்தின் இந்த முடிவால் நாட்டில் 16,000 நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றே Airbus நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், உதிரி பகங்கள் அனைத்தும் ஸ்பெயின் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்தே கொள்முதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருக்கடியான இந்த காலகட்டத்தில் போர் விமானங்களை நவீனப்படுத்துவது அத்தியாவசியமான ஒன்று என பாதுகாப்பு அமைச்சர் மார்கரிட்டா ரோபிள்ஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |