நாடாளுமன்றத்தில் புகுந்த எலி! தெறித்து ஓடிய எம்.பிக்கள்: வைரலாகும் வீடியோ
ஸ்பெயின் நாட்டின் நாடாளுமன்றத்திற்குள் எலி ஒன்று புகுந்ததால் எம்.பிக்கள் பயத்தில் பதறியடித்துக்கொண்டு ஓடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஸ்பெயின் நாட்டின் அந்தாலூசியா (Andalusia) நாடாளுமன்ற கூட்டம் நேற்று நடந்தது. அந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் முக்கியப்பிரச்னை குறித்த விவாதம் நடந்துக்கொண்டிருந்தது.
Susana Diaz-ஐ செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமா? இல்லையா என்பதை தீர்மானிக்க வாக்கெடுப்பு நடந்த திட்டமிட்டிருந்தனர். அதற்கான பணிகள் நடைப்பெற்றுக்கொண்டிருந்தது. எம்.பி.க்கள் வாக்கெடுப்புக்கு தயாராகிக்கொண்டிருந்தனர்.
சபாநாயகர் Marta Bosquet உரையாற்றிக்கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென எலி எனக் கூறி அலறினார். நாடாளுமன்றத்திற்குள் புகுந்த எலி பெண் எம்.பி இருக்கை நோக்கி ஓடி வர அவர் பயத்தில் தனது இருக்கையை விட்டு எழுந்து ஓடினார்.
எலி அந்த அவைக்குள் அங்கும் இங்கும் ஓடியதால் பெண் எம்.பிக்கள் சிலர் கூச்சலிட்டனர். சில ஆண்கள் அங்கிருந்த மேஜை மீதும் நாற்காலிகள் மீது ஏறி அமர்ந்தனர். சிலர் அவையை விட்டு வெளியேறினர்.
جرذٌ تجول هذا اليوم داخل قاعة برلمان الحكم الذاتي الأندلسي في إسبانيا.. pic.twitter.com/3r9te5DhjA
— Ramy Abdu| رامي عبده (@RamAbdu) July 21, 2021
இதனை காரணமாக கூட்டம் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த பணியாளர்கள் எலியை ஒருவழியாக அங்கிருந்து வெளியேற்றினர்.
இதனையடுத்து நாடாளுமன்ற நடவடிக்கைகள் மீண்டும் தொடர்ந்தன. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.