ஸ்பெயின் முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து: குறைந்தது 10 பேர் உயிரிழப்பு
ஸ்பெயினில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தபட்சம் 10 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதியோர் இல்லத்தில் தீ விபத்து
இன்று அதிகாலையில் வடக்கு ஸ்பெயினில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 10 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஜராகோசாவில்(Zaragoza) உள்ள Villafranca de Ebro என்ற நகர குடியிருப்பை சேர்ந்த மேலும் 2 பேர் இந்த தீ விபத்து சம்பவத்தில் படுகாயமடைந்து இருப்பதாக ஸ்பெயின் நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
அவர்களின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், மேலும் பலர் புகையை உள்ளிழுத்ததற்கான அவசர சிகிச்சையை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு பணி
உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 5 மணியளவில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட முதியோர் இல்லத்தில் கிட்டத்தட்ட 82 பேர் வரை தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயை தீயணைப்பு வீரர்கள் சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர், அதே நேரத்தில் தீ விபத்துக்கான காரணத்தை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |