ஸ்பெயின் பொதுத் தேர்தல்: விறுவிறுப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு
Spain’s General Election Voters Head to the Polls: ஸ்பெயின் முழுவதும் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
ஸ்பெயினின் நாடாளுமன்றமான 'கோர்டெஸ் ஜெனரல்ஸ்' (Cortes Generales) அமைப்பின் பெரும்பான்மையான உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான முக்கியப் பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
நாடு முழுவதும் மொத்தம் 3,87,28,356 தகுதிவாய்ந்த வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபையின் அனைத்து 350 இடங்களையும், மேலவையான செனட் சபையின் 267 இடங்களில் 209 இடங்களையும் கைப்பற்ற அரசியல் கட்சிகள் தீவிர போட்டியில் உள்ளன.

உள்நாட்டில் நிலவும் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.
வீட்டுவசதி விலையேற்றத்திற்கு எதிரான நாடு தழுவிய போராட்டங்கள் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், வட ஆப்பிரிக்க பகுதியான சியூடா (Ceuta) மற்றும் கேனரி தீவுகளுக்கு (Canary Islands) புலம்பெயர்ந்தோரின் வருகை அதிகரித்திருப்பதையும் அதிகாரிகள் எதிர்கொண்டு வருகின்றனர்.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் பொது சேவைகளுக்கு பெரும் சவாலாக அமைந்த இயற்கைச் சீற்றங்கள் மற்றும் உள்கட்டமைப்பு சிக்கல்களின் பின்னணியில் மக்கள் வாக்களிக்கின்றனர்.