30 வருடங்களுக்கு முன்பு தண்ணீரில் மூழ்கிய பேய் கிராமம்! இப்போ எப்படி இருக்கு? நடுங்க வைக்கும் காட்சிகள்
ஸ்பெயினில் தண்ணீரில் மூழ்கிய கிராமம் 30 ஆண்டுக்கு பிறகு மீண்டும் வெளியே தெரிய தொடங்கியுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கடந்த 1992ஆம் ஆண்டு கட்டப்பட்ட Alto Lindoso அணையால் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலுக்கு இடையே உள்ள கிராமங்கள் அனைத்தும் நீரில் மூழ்கியது. தற்போது அந்த அணையில் நீர் வற்ற தொடங்கியதால் கிராமத்தின் சிதிலமடைந்த குடியிருப்புகள் வெளியே தெரிய தொடங்கியுள்ளது.
இந்நிலையில் மக்கள் வசித்த வீடுகளின் கட்டடங்கள் உருக்குலைந்து எலும்புக் கூடுபோல் காட்சி அளிப்பதால் பொது மக்கள் கிராமத்திற்கு பேய் கிராமம் என பெயரிட்டு அழைத்து வருகின்றனர்.
இதையடுத்து பேய் கிராமத்தின் ட்ரோன் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இவை சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகி வருகின்றது.
இந்நிலையில் ஸ்பெயின் நாட்டின் சுற்றுசூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது, நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி காரணமாக Alto Lindoso அணையின் மொத்த கொள்ளளவில் வெறும் 15 சதவிகிதம் மட்டுமே தண்ணீர் உள்ளது. இப்படியே நீடித்தால் நிலைமை மோசமாக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.