மனித குலத்திற்கான மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடி இது உருவெடுக்கும்? ஸ்பெயின் எச்சரிக்கை
ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் வலியுறுத்தியுள்ளார்
எரிசக்தி நெருக்கடி குறித்து ஸ்பெயின் கவலை
ஹார்முஸ் ஜலசந்தி ஈரானிய படைகளால் மூடப்பட்டுள்ள நிலையில், உலகளாவிய அளவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய எரிசக்தி தட்டுப்பாட்டை சுட்டிக்காட்டி ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் கவலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை பெட்ரோ சான்செஸ் வெளியிட்ட கோரிக்கையில், ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற கப்பல் போக்குவரத்து உறுதி செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

X தளத்தில் வெளியிட்ட பதிவில், சர்வதேச புவிசார் அரசியல் சூழ்நிலை மிகப்பெரிய திருப்புமுனையில் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் மத்திய கிழக்கில் உள்ள அனைத்து எரிசக்தி நிலையங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன், ஹார்முஸ் ஜலசந்தியும் உடனடியாக திறக்கப்பட வேண்டும் என்று ஸ்பெயின் கோரிக்கை முன்வைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய போர் மோதல் தீவிரமடைந்தால், உலகளாவிய மனித குலத்தை மிகப்பெரிய மற்றும் நீண்ட கால எரிசக்தி நெருக்கடிக்குள் தள்ளிவிடும் என்றும், இந்த போரின் விளைவுகளை ஒட்டுமொத்த உலக மக்களும் அனுபவிக்க கூடாது என்று பெட்ரோ சான்செஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி 48 மணி நேரத்திற்குள் திறக்கப்படாவிட்டால் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது மிகப்பெரிய தாக்குதல் முன்னெடுக்கப்படும் என்று டிரம்ப் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |