மனைவியை வேலைக்காரி போல் நடத்திய தொழிலதிபர்; 7 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு
ஸ்பெயினில் உள்ள தொழிலதிபர் ஒருவர் தனது முன்னாள் மனைவிக்கு 25 வருடங்களாக வீட்டு வேலை செய்ததற்காக 204,000 யூரோக்கள் (தோராயமாக ரூ. 1.7 கோடி) இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அவரது மனைவி இவானா மோரல் மிகப்பெரிய தொகையினை ஜீவனாம்சமாக பெற உள்ளார்.
இவானா மோரல் (Ivana Moral) தனது கணவரை 1995-ல் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் 2020-ல் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். அவர்களது 25 வருட திருமணத்தின் போது, அவரது கணவர் வெற்றிகரமான ஜிம் தொழிலை உருவாக்கி, தனது செல்வத்தைப் பயன்படுத்தி 4 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள 70 ஹெக்டேர் ஆலிவ் எண்ணெய் பண்ணை, சொகுசு கார்கள் மற்றும் பிற சொத்துக்களை வாங்கினார்.
ஆனால், அவரது பணத்தையோ சொத்துக்களையளோ பயன்படுத்திக்கொள்ள தன்னை ஒருபோதும் அனுமதிக்கவில்லை என்று மோரல் கூறுகிறார்.
Ivana Moral
அவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே, அவரது கணவர், பொருட்களைப் பிரிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்படி அவரிடம் கேட்டார், அதாவது அவரது பனத்தை எல்லாம் அவர் மட்டுமே வைத்திருக்க வேண்டும், மேலும் அவர்களது பொதுவான உடைமைகளையும் பிரித்துக்கொண்டார்.
“எனது திருமணம் முடிந்த பிறகு எதுவும் மிச்சமில்லாமல் (எனது முன்னாள் கணவரால்) நிதி ரீதியாக முற்றிலும் விலக்கப்பட்ட துஷ்பிரயோகம் இது என்பது தெளிவாகத் தெரிகிறது, அதனால் குடும்பத்தில் இத்தனை வருடங்கள் என் நேரம், ஆற்றல் மற்றும் அன்பு அனைத்தையும் செலவழித்த பிறகும் எனக்கும் என் மகள்களுக்கும் எதுவும் இல்லாமல் போய்விட்டது” என்று அவர் கூறினார்.
“நான் என் கணவரின் வேலையில் ஒரு மனைவியாகவும், குடும்பத்திற்கு ஒரு தாயாகவும் அவருக்கு ஆதரவாக இருந்தேன். அவருடைய நிதி விவகாரங்களை அணுக நான் ஒருபோதும் அனுமதிக்கப்படவில்லை; எல்லாம் அவர் பெயரில் இருந்தது" என்றார்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இப்போது மோரலின் முன்னாள் கணவருக்கு இழப்பீடாக 204,000 யூரோக்கள் மற்றும் மாதம் ஒன்றுக்கு 500 யூரோக்கள் ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, 20 மற்றும் 14 வயதுடைய அவரது இரண்டு மகள்களுக்கு மாதம் ஒன்றுக்கு 400 மற்றும் 600 யூரோக்கள் செலுத்துமாறும் அவர் கேட்கப்பட்டுள்ளார்.