உதட்டு முத்த சர்ச்சையில் சிக்கிய தலைவர், மகள்களுக்கு உதவித்தொகையை இரட்டிப்பாக வழங்க உத்தரவு!
ஸ்பெயின் கால்பந்து தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் தனது பிள்ளைகளுக்கு அளிக்கும் உதவித்தொகையை இரட்டிப்பாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
உதட்டு முத்த சர்ச்சை
மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரை ஸ்பெயின் அணி வென்ற பின்னர் பதக்கம் அளிக்கப்பட்டபோது, கால்பந்து தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் வீராங்கனைக்கு உதட்டு முத்தம் கொடுத்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
அவருக்கு எதிராக மொத்த அணியும் பதவி விலகும் வரை விளையாட மாட்டோம் எனக் கூறியது. இதனைத் தொடர்ந்து லூயிஸ் ரூபியேல்ஸ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அவரது முன்னாள் மனைவி மரியா மானுவெல, மகளின் ஆதரவு கொடுப்பனவுகளை மறுபரிசீலனை செய்யுமாறு முன்பு கேட்டதாக கூறப்பட்டது.
AFP
நீதிமன்றம் உத்தரவு
லூயிஸ் ரூபியேல்ஸின் ஆண்டு வருமானம் 2011ஆம் ஆண்டு 97,000 யூரோக்களாக இருந்தது. ஆனால் தற்போது 9,55,000 யூரோக்களாக உயர்ந்துள்ளது.
எதிரணிக்கு தண்ணிகாட்டி வெற்றி கோல் அடித்த மெஸ்ஸி! உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் அர்ஜென்டினா அபாரம் (வீடியோ)
எனவே, லூயிஸ் ரூபியேல்ஸ் தனது ஒவ்வொரு மகள்களுக்கும் (மொத்தம் 3 மகள்கள்) மாதம் தலா 400 யூரோக்களில் இருந்து 800 யூரோக்கள் வரை செலுத்துமாறு வலென்ஸ்சியாவில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு ஸ்பானிஷ் தொலைக்காட்சி நேர்காணலில் லூயிஸ் தமது மகள்கள் லூசியா, அனா மற்றும் எலெனா ஆகியோர் குறித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
REUTERS
AP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |