மைதானத்தில் பயங்கர மோதல்! ஸ்பெயின் கால்பந்து வீரர் 30 வயதில் அதிர்ச்சி மரணம்
Spanish football player miguel dies at 30: ஸ்பானிஷ் கால்பந்து வீரர் ஒருவர் கோல்கீப்பருடன் ஏற்பட்ட பயங்கர மோதலில் உயிரிழந்தார்.
கால்பந்து போட்டி ஒன்றில் எதிரணி கோல்கீப்பருடன் மோதியதில், மார்பில் பலத்த காயமடைந்த ஸ்பானிஷ் வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஸ்பானிஷ் வீரர்
CD Tenerife கால்பந்து அணியைச் சேர்ந்த 30 வயது ஸ்பானிஷ் வீரர் ஜீசஸ் டி மிகுவல்.
திங்களன்று நடைபெற்ற FC Andorra அணிக்கு எதிரான போட்டி ஒன்றில் இவர் விளையாடினார்.
பரபரப்பாக சென்ற போட்டியில் ஜீசஸ் டி மிகுவல் கோல் அடிக்க முயற்சிக்கும்போது, எதிரே வேகமாக வந்த கோல்கீப்பர் ஜீசஸ் ஓவோனோ தாவியதில் கால் மூட்டு தொண்டையில் மோதியது.

ஜீசஸ் டி மிகுவல்
இதில் பலத்த காயமடைந்த ஸ்பானிஷ் வீரர் ஜீசஸ் டி மிகுவல் (Jesus De Miguel) மாரடைப்பிற்கு உள்ளானார்.
அதன் பின்னர் இரவு நேரத்தில் அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், மிகுவல் பரிதாபமாக உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
கடந்த ஆண்டுதான் மிகுவலின் தந்தை உயிரிழந்த நிலையில், தற்போது அவரது சோக மறைவு குடும்பத்தினரை ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
