பாகிஸ்தான் நாட்டுக்கு ஆதரவாக பேசுபவர்கள் அங்கேயே சென்றுவிடுங்கள்: பவன் கல்யாண் பேச்சு
பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தான் நாட்டுக்கு ஆதரவாக பேசுபவர்கள் அங்கேயே சென்றுவிடுங்கள் என்று ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பேசியுள்ளார்.
பவன் கல்யாண் பேச்சு
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காஷ்மீர் எல்லையில் போர் பதற்றம் நிலவியுள்ளது.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பவன் கல்யாண் பேசுகையில், "தீவிரவாதிகளுக்கும், பாகிஸ்தான் நாட்டுக்கும் ஆதரவாக பேசுவது மிகவும் தவறு. அவ்வாறு பேசுபவர்கள் அங்கேயே சென்றுவிடுங்கள்.
தீவிரவாதத்திற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றாக ஒரே மாதிரி நடந்து கொள்ள வேண்டும். காஷ்மீர் தாக்குதல் உயிரிழந்த ஆந்திராவைச் சேர்ந்த மதுசூதன் ராவின் குடும்பத்தாருக்கு ஜனசேனா கட்சி சார்பில் ரூ.50 லட்சம் நிதி உதவி வழங்கப்படுகிறது.
இந்துக்களுக்கு என இருக்கும் ஒரே நாடு இந்தியா மட்டுமே. இங்கு கூட இந்துக்கள் வெளியில் செல்லக் கூடாது என்றால் எப்படி?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |