அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வீட்டில் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிப்பு! விசாரிக்க சிறப்பு அதிகாரி நியமனம்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வீட்டில் அரசாங்க ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இது குறித்து விசாரணை நடந்த சிறப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்கா ஜனதிபதி ஜோ பைடனின் வீடு மற்றும் அவரது தனி அலுவலகத்திலிருந்து இரண்டு தொகுப்புகளாக அரசாங்கத்தின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவை அனைத்தும் ஜோ பைடன் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருந்த 2009 முதல் 2016 ஆண்டு வரையிலான ஆணவங்கள் ஆகும்.
அரசாங்கத்தின் மிக முக்கிய மற்றும் ரகசிய ஆவணங்கள் அதிபர் ஜோ பைடனின் வீட்டில் இருந்தது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
AP
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் டெலாவேர் இல்லம் மற்றும் வாஷிங்டன் அலுவலகத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆவணங்களை விசாரிக்க ராபர்ட் ஹரை (Robert Hur) சிறப்பு ஆலோசகராக நியமித்துள்ளதாக அமெரிக்க அட்டர்னி ஜெனரல் மெரிக் கார்லண்ட் (Merrick Garland) வியாழக்கிழமை அறிவித்தார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் டெலவேர் இல்லத்தில் இன்று (வியாழன்) ரகசிய ஆவணங்களின் இரண்டாவது தொகுதி கண்டெடுக்கப்பட்டது.
கடந்த இலையுதிர்காலத்தில் வாஷிங்டனில் உள்ள அவரது அலுவலகத்தில் முதல் தொகுதி கண்டுபிடிக்கப்பட்டது என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
குறைந்தபட்சம் 10 ஆவணங்களின் ஆரம்ப தொகுதி நவம்பர் 2022-ல் வெள்ளை மாளிகைக்கு அருகிலுள்ள பென் பைடன் மையத்தில் (Penn Biden Center) கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் இந்த இன்று இரண்டாவது தொகுப்பு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அந்தக் கோப்புகளில் உக்ரைன், ஈரான் மற்றும் பிரித்தானியா தொடர்பான சில விளக்கப் பொருட்களுடன் அமெரிக்க உளவுத்துறை குறிப்புகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது.