மாணவர்களுக்கு சைவ சாப்பாடு.. விஜய்க்கு மட்டும் ஸ்பெஷல் சாப்பாடா! சமையல் கலைஞர் சொன்னது என்ன?
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விருது வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு சைவ உணவு வழங்கப்பட நிலையில் விஜய்க்கு மட்டும் ஸ்பெஷல் உணவு வழங்கப்பட்டதாக தகவல்கள் பரவி வருகிறது.
விஜயின் விருது விழா
தமிழகத்தில் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களை தொகுதி வாரியாக அழைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் கல்வி விருது வழங்கும் விழா கடந்த 28 -ம் திகதி நடைபெற்றது.
இந்த விழாவில் மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தி ஊக்கத்தொகைகளை அக்கட்சியின் தலைவர் விஜய் வழங்கினார்.
அப்போது கடந்த முறையை போலவே இந்த முறையும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அறுசுவை உணவு வழங்கினார்.
ஸ்பெஷல் உணவா?
அதன்படி விருது விழா நிகழ்ச்சியில் மொத்தம் 16 வகையான உணவுகள் மதியம் வழங்கப்பட்டன. வடை, அப்பளம், அவியல், ஸ்வீட், வெற்றிலை பாயாசம், சாதம், மோர், மலாய் சான்விச், இஞ்சி துவையல், தயிர் பச்சடி, பக்கோடா, மணிலா பொரியல், உருளை காரகறி, வத்தக் குழம்பு, கதம்ப சாம்பார், ஆனியன் மணிலா, தக்காளி ரசம் ஆகியவை வழங்கப்பட்டன.
அப்போது, விருது வழங்கும் நிகழ்ச்சியின் போதே எல்லாரையும் விஜய் சாப்பிட வைத்து தான் அனுப்பினார். இதில், மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவு இல்லாமல் விஜய்க்கு ஸ்பெஷலாக உணவு பரிமாறப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து சமையல் செய்த கலைஞர் ஒருவர் பேசுகையில், "கடந்த முறையும் நாங்கள் தான் சமையல் செய்தோம். விஜய்க்கு என எந்த ஸ்பெஷல் உணவும் தயாரிக்கப்படவில்லை.
அவரது தரப்பும் எங்களிடம் ஸ்பெஷலாக தயார் செய்து கொடுங்கள் என்று கேட்கவில்லை. எல்லோரும் என்ன சாப்பிட்டார்களோ அதைத்தான் விஜய்யும் சாப்பிட்டார்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |