வாக்களிப்பு நேரத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம் - வெளியான விசேட வர்த்தமானி
வாக்களிப்பு நேரத்தில் திருத்தம் மேற்கொண்டுள்ளதாக விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
வாக்களிப்பு நேரத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கை இன்று காலை 7 மணியளவில் ஆரம்பமாகியது.
காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4 மணி வரையில் இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) அறிவித்துள்ளது.
1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் சட்டத்துக்கமைய மாலை 4 மணி வரை வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாலை 4 மணியாகும்போது வாக்கெடுப்பு நிலையத்தில் வரிசை அல்லது வரிசைகளில் நிற்கின்ற அனைத்து வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்கப்படும் வரையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என அதிவிசேட வர்த்தமானி ஊடாக ஜனாதிபதி தேர்தலுக்கான நேர எல்லை திருத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |