முஸ்லிம் அரசு ஊழியர்களுக்கு விசேட விடுமுறை: அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை
குறிப்பிட்ட அரசு ஊழியர்களுக்கான ரமலான் கால சிறப்பு விடுமுறை குறித்த அரசு சுற்றறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
ரமலான் கால சிறப்பு விடுமுறை
குறிப்பிட்ட அரசு ஊழியர்களுக்கு 2026 ரமலான் கால சிறப்பு நடைமுறை மற்றும் விடுமுறை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை ஒன்றை பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு ரமலான் மாதம் பிப்ரவரி 19ம் திகதி தொடங்கி மார்ச் மாதம் 21ம் திகதி முடிவடைய உள்ள நிலையில், இந்த காலத்தில் முஸ்லிம் மதத்தை சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு அவர்களுக்கான தொழுகை மற்றும் மத வழிபாடுகளில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருவது தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் அரசு ஊழியர்கள் அவர்களின் அலுவலக நேரங்களில் சமய வழிபாடுகளில் கலந்து கொள்வதற்கு ஏற்ற வேலை நேரங்களை ஒழுங்கு செய்து கொடுத்தல் மற்றும் தவிர்க்க முடியாத நேரங்களில் அவர்களுக்கான சிறப்பு விடுமுறை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் ரமலான் பெருநாளில் இறுதித் திகதிக்கு 14 நாட்களுக்கு முன்னதாகவே அரசு மற்றும் நிதியச்சட்ட சபைகள் ஆகியவற்றில் பணிபுரியும் முஸ்லிம் ஊழியர்களுக்கான விழா முற்பணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |