வடகொரியாவில் அத்துமீறி ஊடுருவிய தென்கொரிய ட்ரோன்கள்: கூட்டு விசாரணைக்கு அழைப்பு
வட கொரியா மீதான ட்ரோன் தாக்குதல் குற்றச்சாட்டுகளை தென் கொரியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ட்ரோன் தாக்குதல் குற்றச்சாட்டு
தங்கள் நாட்டின் வான் பரப்பிற்குள் தென்கொரியாவின் ஆளில்லா விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக வட கொரியா குற்றச்சாட்டியுள்ள நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.

இதையடுத்து, தங்கள் நாட்டின் இறையாண்மை மீறப்பட்டுள்ளது, இதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆனால் ட்ரோன் அத்துமீறல் தொடர்பான பியோங்யாங் குற்றச்சாட்டை தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர் அன் கியூ-பெக்(Ahn Gyu-Back) திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ட்ரோன் அத்துமீறல் தொடர்பாக வட கொரியா வெளியிட்ட ஆதாரங்கள் தென்கொரிய ராணுவத்தின் விமானப்படை மாதிரிகளுடன் ஒத்துப் போகவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கூட்டு விசாரணை
இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த பதற்றத்தை குறைக்க சியோல் மற்றும் பியோங்யாங் அதிகாரிகள் இணைந்து கூட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று தென்கொரியா முன்மொழிந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |