சிறப்பு SI வெட்டி கொலை செய்யப்பட்ட விவகாரம்.., குற்றவாளி என்கவுண்டரில் சுட்டுக்கொலை
சிறப்பு SI வெட்டி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளி என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
என்கவுண்டரில் சுட்டுக்கொலை
தமிழக மாவட்டமான திருப்பூர், உடுமலை பேட்டை தாலுகா குடிமங்கலம் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் மகேந்திரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் பணிபுரிந்து வந்துள்ள மூர்த்தி மற்றும் அவரது தங்க பாண்டியனுக்கு இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், தந்தை மூர்த்தியை மகன் தங்க பாண்டியன் கடுமையாக தாக்கியதால் அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அப்போது, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற சண்முகவேல் காயமடைந்த மூர்த்தியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த தங்க பாண்டியன் அரிவாளால் சண்முகவேலை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, மூர்த்தி மற்றும் தங்கப்பாண்டியன் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று சரணடைந்தனர். மேலும், தலைமறைவாக இருந்த மணிகண்டனை பொலிஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில், மணிகண்டனை கைது செய்த பொலிஸார் அவரை அழைத்துச் சென்றனர். அப்போது, மணிகண்டன் பொலிஸாரை அரிவாளால் தாக்கியதில் காவல் உதவி ஆய்வாளர் சரவணனுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனால், குற்றவாளி மணிகண்டனை பொலிஸார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |