மகளின் திருமணத்திற்கு ரூ.550 கோடி செலவு செய்து.. திவாலாகி சிறைக்கு சென்றவர் யார்?
மகளின் திருமணத்திற்கு ரூ.550 கோடி செலவு செய்த கோடீஸ்வரர் ஒருவர் திவாலாகி சிறைக்கும் சென்றுள்ளார்.
யார் அவர்?
ஒரு காலத்தில் கோடீஸ்வரர்களாக இருந்த பல தொழிலதிபர்கள் பல காரணங்களால் வாழ்க்கையில் திவாலாகிவிட்டனர். சிலர் அன்றாடச் செலவுகளுக்கு மனைவி மற்றும் குழந்தைகளைச் சார்ந்திருக்க வேண்டிள்ளது.
இந்த மாதிரியான சூழ்நிலையை சந்தித்தவர் தான் இஸ்பாட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (தற்போது JSW Ispat Steel) தலைவராக இருந்த பிரமோத் மிட்டல். இவர் இந்திய பில்லியனர் மற்றும் எஃகு அதிபரான லட்சுமி மிட்டலின் சகோதரர் ஆவார்.
கடந்த 2020 ஆம் ஆண்டில் தனது கடனாளிகளுக்கு 2.5 பில்லியன் பவுண்டுகள் (அப்போது சுமார் ரூ. 24,000 கோடி) செலுத்திய பின்னர் பிரமோத் மிட்டல் திவாலானதாக அறிவிக்கப்பட்டார்.
பிரமோத் மிட்டல் உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர் ஆவார். 2013 -ம் ஆண்டில் தனது மகள் ஷ்ரிஸ்டியின் திருமணத்திற்காக சுமார் 550 கோடி ரூபாய் செலவிட்டார்.
68 வயதான பிரமோத் மிட்டல் ஜூன் 2020 -ம் ஆண்டில் லண்டன் நீதிமன்றத்தில் 130 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் கடன் இருந்ததால் திவாலானதாக அறிவிக்கப்பட்டார்.
அப்போது அவர், தனக்கு தனிப்பட்ட வருமானம் இல்லை என்றும், அந்த நேரத்தில் தனது பெயரில் டெல்லியில் வெறும் 45 பவுண்டுகளில் ஒரே ஒரு சொத்து மட்டுமே இருந்ததாகவும் கூறினார்.
இதையடுத்து, 2019 இல் போஸ்னியாவில் மோசடி குற்றச்சாட்டில் பிரமோத் கைது செய்யப்பட்டார். பிரமோத் ஒருமுறை GIKIL என்ற போஸ்னிய கோக் தயாரிப்பாளரின் கடன்களுக்கு உத்தரவாதம் அளிப்பதாக ஒப்புக்கொண்டார்.
1111 நாட்கள் கொண்ட SBI Green Deposit FD திட்டம்.., ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?
அதாவது அவரது குளோபல் ஸ்டீல் ஹோல்டிங்ஸ் GIKIL இன் கடன்களுக்கு உத்தரவாதம் அளிப்பதற்காக கையெழுத்திட்டது. ஆனால், லண்டனில் உள்ள அதன் எஃகு வர்த்தக உத்தரவாத நிறுவனத்திற்கு GIKIL திருப்பிச் செலுத்த முடியவில்லை.
இன்று, அவரது சகோதரர் லக்ஷ்மி மிட்டல், ஃபோர்ப்ஸ் படி, 15.5 பில்லியன் டொலர் நிகர மதிப்புடன் இந்திய பணக்காரர்களில் ஒருவராக இருக்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |